Sunday, 28 February 2010

மீண்டும் காதலில் சிம்பு.......?

சிலகாலமாக நயன்தாராவை காதலித்து பிரிந்து தன்பாட்டில் சென்றவர் சிம்பு. இது யாவரும் அறிந்த பழைய விடயம். ஆனால் நயன்தாரா இப்போது பிரபு தேவாவை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்படுகின்றது.


சரி, சிம்புவின் விடயத்துக்கு வருவோம்... சிம்பு திரிஷாவை காதலிப்பதாக புதிதாக தகவல் பரவ ஆரம்பித்துள்ளது. இருவரும், புதிதாக திரைக்குவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நெருக்கமாக நடித்திருந்தனர். அதிலும் முத்தக்காட்சிகளில் நெருக்கத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.... ஆனால் இந்தக் கிசு கிசுவை மறுத்த சிம்பு, தான் எவரையும் காதலிக்கவில்லை என்றும் தான் தனது வேலையைத்தான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.


மேலும், தனக்கு ஒரு சாதாரணமான பெண் போதும் என்றும் சிறப்பான பெண் தேவையில்லை என்றும் சிம்பு கூறினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எனது பாத்திரத்தை மிகவும் நேசித்தேன். எனது அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை. K.V.ஆனந்தின் படத்தில் நடிப்பதற்கு எண்ணியிருந்தேன். 


ஆனால் படம் தொடங்குவதற்கு முன்னரே எனது சிகையலங்காரத்தை மாற்றுமாறும் அவர் சொல்லுவதுபோல் செய்யுமாறும் கூறுகிறார். இவ்வாறான நிபந்தனைகளை ஏற்க மறுத்து அவரது படத்திலிருந்து விலகிவிட்டேன் எனவும் சிம்பு கூறினார்.  

23 கோடி கேட்ட அஜித் ....!


முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில் பரபரப்பாக பேசிய அஜித், பின்னர் முதல்வரை தனிமையில் சந்தித்துப் பேசினார். அஜீத்-முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன என பலரது மனதையும் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது இப்போது. அஜீத் பேசியது திரையுலக விஷயங்கள் மட்டுமல்ல, தனது கனவுகளில் ஒன்றான கார் ரேஸ் பற்றியும்தானாம். கிட்டதட்ட நாற்பது நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பில் அஜீத் பெரிதாக ஒரு விஷயத்தை சாதித்துவிட்டு வந்திருக்கிறார். அது என்ன?



ங்கிலாந்தில் நடந்த பார்முலா 3 கார் ரேசில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தை அடைந்தவர் அஜீத். பார்முலா 2 ரேசுக்கு முன்னேற வேண்டும் என்பதுதான் அவரது லட்சியங்களில் ஒன்று.


"இந்தியாவில் கார் பந்தயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை வெறும் விளையாட்டாக பார்க்காமல் வியாபாரமாகவும் கருத வேண்டும். பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே அதிக ஊக்கம் தருவதை விட்டுவிட்டு கார் பந்தயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்".

"இந்த பந்தயம் என்னவோ பெரும் பணக்காரர்களின் விளையாட்டு என்று கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கவே நானும் கூட இதில் ஈடுபடுகிறேன். இந்த விளையாட்டை நம் நாட்டில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் தருவதை போல இந்த விளையாட்டுக்கும் ஊக்கம் தர வேண்டும்" என்று முன்பு ரேஸ்களில் கலந்து கொள்ளும் போது கூறி வந்தார் அஜித்.

முதல்வரை சந்தித்தபோதும் இது குறித்துதான் பேசினாராம் அஜித், "ஃபார்முலா 2 கார் ரேசுக்கு அரசே நிதி ஒதுக்கி ஸ்பான்சர் செய்யணும். இதுக்கு 23 கோடி ரூபாய் ஆகும். அதை நீங்க எங்களுக்கு செஞ்சு தரணும்" என்று வேண்டுகோள் வைத்தாராம். தகுதியான நான்கு வீரர்களின் பயோ டேட்டாக்களையும் கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள். இதுபற்றியெல்லாம் ஆர்வமாகவும் விளக்கமாகவும் கேட்டுக் கொண்ட முதல்வர், உடனடியாக பாஸிட்டிவான பதிலும் கொடுத்தாராம். பொறுத்திருந்து பார்க்கலாம், அரசு நிதியுதவி செய்கிறதா என்று....

Saturday, 27 February 2010

சுருதிஹாசனிடம் சென்ற அசினின் வாய்ப்பு


A.R.முருகதாஸ் இயக்கவிருக்கும் மூன்று மொழிகளில் மிகப்பெரிய செலவில் பிரமாண்டமாக எடுக்கப்படவிருக்கும் படத்தில் அசின் நடிப்பதாக கூறப்பட்டாலும் இப்போது அசின் அந்த வாய்ப்பை இழந்துவிட்டதாக தோன்றுகின்றது. அசின்இன் இடத்தில் சுருதிஹாசன் நடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சுருதிஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மகள், அவர் அண்மையில் அறிமுகமான ஒரு நடிகை.

கஜினி(ஹிந்தி) திரைப்படம் வெளியிடப்பட்டதிலிருந்து மிகப் பிரபலமாகியுள்ள இயக்குனரின் படத்தில் நடிக்க எவருமே ஆசைப்படுவர். அத்துடன் அசின், கஜினியின் தமிழ் பதிப்பிலும் நடித்திருந்தார். முறையான அறிவிப்புகள் எவையும் வெளியிடப்படாதிருந்தாலும், முருகதாசின் புதிய படத்தில் அசின் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

முருகதாசின் புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப்படத்தில் சூர்யா நடிப்பார் என தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி K சந்திரன் கடமையாற்றுகிறார்.

அஞ்சலி தேவி சதாபிஷேகம்

கறுப்பு - வெள்ளை காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த அஞ்சலி தேவியின் சதாபிஷேகம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த நண்பர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் கருணாநிதி அவரது பாரியார் தயாளு அம்மாள் சகிதம் விழாவிற்கு வந்து அஞ்சலி தேவியை வாழ்த்தினார்.

அவரது நண்பர்களும் தொழல்துறைசார் நண்பர்களுமான, நடிகர்கள் ராஜா சுலோச்சனா, S.N.லக்ஷ்மி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி, ஊர்வசி சாரதா, காஞ்சனா, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, குட்டி பத்மினி, S.V.சேகர், ரம்யா கிருஷ்ணன், M.N.ராஜன், ராஜஸ்ரீ, பிரபு மற்றும் ராம்குமாரும் அவரது மனைவியும், பாடகர் P.சுசீலா, முக்தா சீனிவாசன் மற்றும் திரைத்துறை செய்தியாளர் ஆனந்தன் ஆகியோர் அஞ்சலி தேவியின் வாழ்த்தை பெற்றனர்.

23 ம் திகதி ஐப்பசி மாதம் 1928 ம் ஆண்டு காக்கிநாட மாவட்டத்திலுள்ள பெட்டபுரத்தில் பிறந்த அஞ்சலி தேவி, தனது 8வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவர் 'கொல்ல பாமா' எனும் படத்தில் C.புல்லையாவினால் மோகினி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அன்றிலிருந்து வெற்றிநடை போட்ட அஞ்சலி தேவி 400௦௦ இற்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 40 களிலும் 50 களிலும் எல்லா பிரபலமான நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

சத்திய சாயி பாபாவின் பக்தையான அஞ்சலி தேவி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பொன்னான காலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த நடிகை ஆவார்.

(மேலுள்ள தகவல்களும் கீழுள்ள படங்களும் Indiaglitz இலிருந்து எடுக்கப்பட்டவை)
மேலும் படங்கள் பார்க்க விரும்பினால் IndiaGlitz இற்கு விஜயம் செய்க.


ஆங்கிலப்படத்தில் வினய்


இதுவரை தமிழில் நடித்துவந்த நடிகர் வினய் வேற்று மொழி படமொன்றில் நடிக்கவிருக்கிறார். வினய் நடிக்கவுள்ள ஆங்கிலப்படத்திற்கு Dam 999 என பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில் வினைக்கு ஜோடியாக விமலா ராமன் நடிக்கவிருக்கிறார். அடுத்த மாதத்தில் கேரளாவில் படப்பிடிப்பை தொடங்கவிருக்கும் படப்பிடிப்பு குழு, துபாய், நோர்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பை நடாத்த திட்டமிட்டுள்ளது. Hollywood இலிருந்தும் இரு நடிகர்கள் இந்தப்படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

மலையாள படத்தில் சோனியா அகர்வால்

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றுள் 7G ரெயின்போ காலனி மற்றும் திருட்டுபயலே முக்கியமான படங்கள். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்தபின்னர் அவர் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் செல்வராகவன் நடிகை அண்ட்ரியா உடன் நெருங்கி பழகுவதாக வந்த செய்தியுடன் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் உருவாக்கி அது விவாகரத்து வழக்கிற்காக நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு சென்றது. பின்னர் இருவரையும் பிரிந்து வாழும் நிலைமையையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சோனியா அகர்வால் புதிய படங்களில் வாய்ப்பு தேடினார். கவர்ச்சி உடையில் பொது நிகழ்ச்சிகளுக்கு வந்த அவர் தனது புகைப்படங்களையும் அல்பம்களையும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பினார்.

இப்போது மலையாளப் படம் ஒன்றில் நடிக்க தெரிவாகியிருக்கிறார். அந்தப்படத்தில் ஹீரோவாக சுரேஷ் கோபி நடிக்கவிருக்கும் அதேவேளை அந்தப்படத்தை T.S.சுரேஷ் பாபு இயக்குகிறார்.

நான் அவசரத்தில் இல்லை : திரிஷா

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் நேற்று திரைக்கு வந்ததுடன், திரிஷாவின் பாரம் குறைந்துவிட்டது. இருந்தாலும், அடுத்த வேலைக்கு தான் அவசரப்படவில்லை என்றும் கையொப்பம் இட முன்னர் தான் கதையை தெரிவு செய்ய வேண்டும் என்றும் சொல்ல்கிறார்.

"இப்போது எனது திரைப் பயணம் முக்கிய கட்டத்திலிருப்பதால், கவனமாக இருக்க நினைக்கிறேன். நல்ல திரைக்கதையை தெரிவு செய்து ஒரே நேரத்தில் சில படங்களில் மாத்திரமே கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். எண்ணிக்கை விளையாட்டில் பிரயோசனம் இல்லை." என திரிஷா கூறினார்.

முயற்சியும் திறமையும் கொண்ட ஒவ்வொரு நடிகருக்கும் சினிமா துறையில் இடமிருக்கிறது என்று கூறிய திரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா படம் பற்றி  கூறியதாவது, "எதிர்பார்ப்புகள் என்னை பதட்டமடைய செய்தன. எப்படி என்றாலும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்னை மகிழ்சியடைய செய்கின்றன. ஏனென்றால் திரைக்கதை ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டது.  எனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்களில் அதுவும் ஒன்று."

விண்ணை தாண்டி வருவாயா படங்கள்

       

விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம்


இயக்குனர் : கெளதம் மேனன்
தயாரிப்பாளர் : மதன், ஜெயராமன், Elred
இசை அமைப்பாளர் : A.R. ரகுமான்
நடிகன் : சிலம்பரசன்
நடிகை : திரிஷா

இது ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் ஆக சிலம்பரசனும் ஜெஸ்ஸி ஆக திரிஷாவும் பிரதான பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான காட்சி அமைப்புகள், இனிமையான பின்னணிப் பாடல்கள் மற்றும் இதமான பின்னணி இசையுடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடியதாக படமாக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்திற்கும் குடும்பத்தாரிற்கும் பயந்து காதலை மறைத்து அது ஒரு நட்பு மட்டுந்தான் என சொல்லிக்கொள்ளுபவர்கள் எவ்வாறு தவிப்பார்கள் என்பதை  மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் எவ்வாறு பத்திக்கொள்ளும் என்பதை ரயில் பயணத்தின் மூலமாக நாசூக்காக காட்டியிருக்கிறார்கள்.

நகைச்சுவைக் காட்சி தனியாக இல்லாவிட்டலும் படம் விறுவிறுப்பாக தொய்வில்லாமல் நகர்கிறது. இரண்டு சண்டைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளது.

படத்தில் முத்தக்காட்சிகளுக்கு குறைவில்லை. சிம்பு கமலை முந்திவிடுவாரோ என எண்ணத்தோன்றுகிறது.

 பல்வேறு திருப்பங்களுடன் நகரும் கதையில் கடைசியில் காதலர்கள் ஒன்று சேருகிரர்களா என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அழகான காட்சியமைப்புகளும், இதமான பின்னணி இசையும் படத்திற்கு வலுக்கேர்கின்றன.

விமர்சனம் எனும் பெயரில் திரைக் கதையை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
   
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog