Showing posts with label Simbu. Show all posts
Showing posts with label Simbu. Show all posts

Wednesday, 12 May 2010

சிம்புவின் வீட்டில் இரகசிய திருமணம்?

நடிகர் சிம்புவின் வீட்டில் இரகசிய திருமணம் நடந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டதாக அறியக்கிடைக்கிறது. விஜய T. ராஜேந்தரின் மகளான தமிழ் இலக்கியாவின் திருமணமே சிம்புவின் வீட்டில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த செய்தியை சிம்புவும் ராஜேந்தரும் மறுத்துள்ளனர்.


ராஜேந்தர் மேலும் கூறியதாவது, தனது மகள் தமிழ் இலக்கியாவிற்கு தகுந்த மணமகனை தேடிக்கொண்டிருப்பதாகவும் பெரும்பாலும் அவரது திருமண செய்தியை இவ்வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியிடுவார் என்றும் கூறினார்.


தனது தங்கையின் திருமணத்தின் பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று ன்னர் ஒருதடவை கூறியது நினைவிருக்கலாம்.

Saturday, 13 March 2010

சிம்புவால் மனம் மாறிய சிங்கப்பூர் பெண்....!!!

அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் நாயகன் சிம்பு, ஒரு சிங்கப்பூர் பெண்ணின் மனதை மாற்றிய சந்தோசத்திலிருக்கிறார். மனம் மாறிய பெண், பிரபலமான ஒரு சமூக இணையத்தளத்தில் வெளியிட்ட படைப்பாலேயே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூர் இல் வசிக்கும் ஒரு பெண் சில காரணங்களுக்காக தனது காதலனை பிரிந்திருந்தார். சிம்பு நடித்த விண்ணைதாண்டி வருவாயா படத்தை பார்த்து தான் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும், தனது காதலனுடன் மீண்டும் இணையப்போவதாகவும் அந்த சமூக இணையத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் சிம்புவிற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி நடிகர் சிம்புவிடம் கேட்டபோது, பெரிய புன்னகையுடன் அவர் சொன்ன பதில் : "என் நடிப்பால் ஒரு பெண்ணின் மனதை மாற்ற முடியுமென்பது ஆச்சரியமளிக்கிறது. சந்தோசப்படும் அதேவேளை கௌரவிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன்". இது தொடர்பாக படத்தின் இயக்குனர் கெளதம் மேனன் கூறியதாவது : "கிடைக்கும் பெருமையெல்லாம் சிம்புவையே சாரும்".

Sunday, 28 February 2010

மீண்டும் காதலில் சிம்பு.......?

சிலகாலமாக நயன்தாராவை காதலித்து பிரிந்து தன்பாட்டில் சென்றவர் சிம்பு. இது யாவரும் அறிந்த பழைய விடயம். ஆனால் நயன்தாரா இப்போது பிரபு தேவாவை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்படுகின்றது.


சரி, சிம்புவின் விடயத்துக்கு வருவோம்... சிம்பு திரிஷாவை காதலிப்பதாக புதிதாக தகவல் பரவ ஆரம்பித்துள்ளது. இருவரும், புதிதாக திரைக்குவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நெருக்கமாக நடித்திருந்தனர். அதிலும் முத்தக்காட்சிகளில் நெருக்கத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.... ஆனால் இந்தக் கிசு கிசுவை மறுத்த சிம்பு, தான் எவரையும் காதலிக்கவில்லை என்றும் தான் தனது வேலையைத்தான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.


மேலும், தனக்கு ஒரு சாதாரணமான பெண் போதும் என்றும் சிறப்பான பெண் தேவையில்லை என்றும் சிம்பு கூறினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எனது பாத்திரத்தை மிகவும் நேசித்தேன். எனது அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை. K.V.ஆனந்தின் படத்தில் நடிப்பதற்கு எண்ணியிருந்தேன். 


ஆனால் படம் தொடங்குவதற்கு முன்னரே எனது சிகையலங்காரத்தை மாற்றுமாறும் அவர் சொல்லுவதுபோல் செய்யுமாறும் கூறுகிறார். இவ்வாறான நிபந்தனைகளை ஏற்க மறுத்து அவரது படத்திலிருந்து விலகிவிட்டேன் எனவும் சிம்பு கூறினார்.  

Saturday, 27 February 2010

விண்ணை தாண்டி வருவாயா படங்கள்

       

விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம்


இயக்குனர் : கெளதம் மேனன்
தயாரிப்பாளர் : மதன், ஜெயராமன், Elred
இசை அமைப்பாளர் : A.R. ரகுமான்
நடிகன் : சிலம்பரசன்
நடிகை : திரிஷா

இது ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் ஆக சிலம்பரசனும் ஜெஸ்ஸி ஆக திரிஷாவும் பிரதான பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான காட்சி அமைப்புகள், இனிமையான பின்னணிப் பாடல்கள் மற்றும் இதமான பின்னணி இசையுடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடியதாக படமாக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்திற்கும் குடும்பத்தாரிற்கும் பயந்து காதலை மறைத்து அது ஒரு நட்பு மட்டுந்தான் என சொல்லிக்கொள்ளுபவர்கள் எவ்வாறு தவிப்பார்கள் என்பதை  மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் எவ்வாறு பத்திக்கொள்ளும் என்பதை ரயில் பயணத்தின் மூலமாக நாசூக்காக காட்டியிருக்கிறார்கள்.

நகைச்சுவைக் காட்சி தனியாக இல்லாவிட்டலும் படம் விறுவிறுப்பாக தொய்வில்லாமல் நகர்கிறது. இரண்டு சண்டைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளது.

படத்தில் முத்தக்காட்சிகளுக்கு குறைவில்லை. சிம்பு கமலை முந்திவிடுவாரோ என எண்ணத்தோன்றுகிறது.

 பல்வேறு திருப்பங்களுடன் நகரும் கதையில் கடைசியில் காதலர்கள் ஒன்று சேருகிரர்களா என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அழகான காட்சியமைப்புகளும், இதமான பின்னணி இசையும் படத்திற்கு வலுக்கேர்கின்றன.

விமர்சனம் எனும் பெயரில் திரைக் கதையை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
   
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog