இயக்குனர் : கெளதம் மேனன்
தயாரிப்பாளர் : மதன், ஜெயராமன், Elred
இசை அமைப்பாளர் : A.R. ரகுமான்
நடிகன் : சிலம்பரசன்
நடிகை : திரிஷா
இது ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் ஆக சிலம்பரசனும் ஜெஸ்ஸி ஆக திரிஷாவும் பிரதான பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான காட்சி அமைப்புகள், இனிமையான பின்னணிப் பாடல்கள் மற்றும் இதமான பின்னணி இசையுடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடியதாக படமாக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்திற்கும் குடும்பத்தாரிற்கும் பயந்து காதலை மறைத்து அது ஒரு நட்பு மட்டுந்தான் என சொல்லிக்கொள்ளுபவர்கள் எவ்வாறு தவிப்பார்கள் என்பதை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் எவ்வாறு பத்திக்கொள்ளும் என்பதை ரயில் பயணத்தின் மூலமாக நாசூக்காக காட்டியிருக்கிறார்கள்.
நகைச்சுவைக் காட்சி தனியாக இல்லாவிட்டலும் படம் விறுவிறுப்பாக தொய்வில்லாமல் நகர்கிறது. இரண்டு சண்டைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளது.
படத்தில் முத்தக்காட்சிகளுக்கு குறைவில்லை. சிம்பு கமலை முந்திவிடுவாரோ என எண்ணத்தோன்றுகிறது.
பல்வேறு திருப்பங்களுடன் நகரும் கதையில் கடைசியில் காதலர்கள் ஒன்று சேருகிரர்களா என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அழகான காட்சியமைப்புகளும், இதமான பின்னணி இசையும் படத்திற்கு வலுக்கேர்கின்றன.
விமர்சனம் எனும் பெயரில் திரைக் கதையை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment