Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Friday, 5 March 2010

சாமியார்களை நம்பாத த்ரிஷா ... !


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விண்ணைத்தாண்டி வருவாயா நாயகன் சிம்பு, நாயகி த்ரிஷா, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தச் சந்திப்பில் த்ரிஷாவிடம் சினிமாவைத் தவிர வேறு சில கேள்விகள் கேட்கப்பட்டன. 

கேள்வி: எந்த சாமியார்களிடமாவது ஆசிர்வாதம் வாங்கியிருக்கீறீர்களா?
பதில்: மனிதனை கடவுளாக நினைக்க மாட்டேன். எந்த சாமியாரிடமும் இதுவரை நான் ஆசிர்வாதம் வாங்கியதில்லை. சாமியார்களை நான் நம்புவதில்லை. 

கேள்வி: நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் வெளிவருகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மீடியா என்பது பவர்ஃபுல் விஷயம். அதைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் பிரபலமானவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றார்.

பாவனாவின் கல்யாணம்.....

ஒரு பத்திரிக்கை, பாவனா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்ட போது, தனது கைத்தொலைபேசி, தொடர்ந்து சினுங்கிக்கொண்டிருந்ததாக பாவனா கூறினார். தனது திருமணம் பற்றி பாவனா மேலும் கூறியதாவது, "என்னவிடயம் என்றே தெரியாமல் சிலர் என்னை வாழ்த்தினார்கள். தொலைபேசியில் கதைத்த சிலர், எனக்கு இன்னும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றால் தாங்கள் என்னை கல்யாணம் பண்ண ஆயத்தமாகவிருப்பதாக கூறினர்.

இவ்வாறன கேள்விகளுக்கு பதிலளிப்பதிலும் பார்க்க, கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் போலத் தோன்றுகிறது எனக்கு. இந்த வதந்திகளுக்கெல்லாம் காரணம், கோபிகா, நவ்யா நாயர் ஆகியோர் கல்யாணம் செய்துவிட்டனர். எனவே மக்கள் நினைக்கிறார்கள் அடுத்ததாக நான் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று. எனது பெற்றோர் இன்னும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கக்கூட இல்லை. இரண்டு வருடங்களுக்கு பின்தான் திருமணம் செய்துகொள்வேன். அதுவும் முன் பின் அறிமுகமில்லாத ஒருவரை திருமணம் செய்யமாட்டேன். எனது திருமணத்தைப்பற்றி நான் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, மிகப் பெரிதாகத்தான் எனது திருமணம் நடைபெறும்.

நிச்சயமாக அறிவித்தலேதும் இல்லாமல் அவசரமாக கல்யாணம் பண்ண மாட்டேன். இந்த விடயம் பற்றி நான் மிகையும் தெளிவாக இருக்கிறேன். என்னைக் கல்யாணம் செய்கிறவர், எனக்கு தெரிந்தவராக, எனது நெருங்கிய நண்பராக, எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்.

அசல் படத்திற்கு பிறகு புனித் ராஜ்குமாருடன் கன்னட மொழிப் படமொன்றில் நடிக்கிறேன். அசல் வெளிவந்த பின்னர், எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் நிறைய தமிழ் படங்கள் என்னைத் தேடி வருகின்றன. எனினும், எந்தவொரு தமிழ் படத்திலும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை" என பாவனா மேலும் கூறினார்.

Tuesday, 2 March 2010

தமன்னாவின் பேட்டி

தில்லாலங்கடி படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் தமன்னாவின் பதில்களும்......

தில்லாலங்கடி பற்றி?
தெலுங்கில் வெற்றிபெற்ற "Kick" படத்தின் மறுபதிப்புதான் இந்தப் படம். ஜெயம் ராஜா இயக்குகிறார். நான் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறேன். இந்தப்படத்தில் எங்களது ஜோடி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். பாடல்கள் நன்றாக வந்துள்ளன. எனக்காக வித்தியாசமான நடன அசைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் ராஜேஷ்கர் என்னை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள்.

விஜயின் சுறாவில் என்ன பாத்திரத்தில் நடிக்கிறீர்கள்?
அந்தப்படத்தில் S.P.ராஜ்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறேன். நகரத்துப் பெண் வேடம். விஜயுடன் முதல் தடவையாக இணைந்து நடிக்கிறேன்.

உங்களுக்கும் நயந்தாராவிற்குமிடையில் எதாவது கருத்து வேறுபாடு இருக்கிறதா?
சில காரணங்களுக்காக நயன்தாரா "பையா" வில் நடிக்கவில்லை. அவருடைய இடத்தில் யாரவது ஒருவர் நடிக்கவேண்டியிருந்தது. அவர்கள் என்னை தெரிவுசெயதர்கள். கதை எனக்கு பிடித்திருந்தது. அத்துடன் நான் கேட்ட சம்பளத்தையும் தந்தார்கள். எனவே நான் அந்தப் படத்தில் நடித்தேன். அதில் எந்த தப்பும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போல எனக்கும் நயந்தாரவிற்குமிடையில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஹிந்தி படங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பம் உண்டா?
தமிழில் எனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டேன். இப்போதைக்கு ஹிந்தியில் நடிக்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும், நல்ல கதையுடன் சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடமாட்டேன்.

Saturday, 27 February 2010

நான் அவசரத்தில் இல்லை : திரிஷா

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் நேற்று திரைக்கு வந்ததுடன், திரிஷாவின் பாரம் குறைந்துவிட்டது. இருந்தாலும், அடுத்த வேலைக்கு தான் அவசரப்படவில்லை என்றும் கையொப்பம் இட முன்னர் தான் கதையை தெரிவு செய்ய வேண்டும் என்றும் சொல்ல்கிறார்.

"இப்போது எனது திரைப் பயணம் முக்கிய கட்டத்திலிருப்பதால், கவனமாக இருக்க நினைக்கிறேன். நல்ல திரைக்கதையை தெரிவு செய்து ஒரே நேரத்தில் சில படங்களில் மாத்திரமே கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். எண்ணிக்கை விளையாட்டில் பிரயோசனம் இல்லை." என திரிஷா கூறினார்.

முயற்சியும் திறமையும் கொண்ட ஒவ்வொரு நடிகருக்கும் சினிமா துறையில் இடமிருக்கிறது என்று கூறிய திரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா படம் பற்றி  கூறியதாவது, "எதிர்பார்ப்புகள் என்னை பதட்டமடைய செய்தன. எப்படி என்றாலும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்னை மகிழ்சியடைய செய்கின்றன. ஏனென்றால் திரைக்கதை ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டது.  எனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்களில் அதுவும் ஒன்று."
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog