Showing posts with label விண்ணைத்தாண்டி வருவாயா. Show all posts
Showing posts with label விண்ணைத்தாண்டி வருவாயா. Show all posts

Friday, 5 March 2010

சாமியார்களை நம்பாத த்ரிஷா ... !


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விண்ணைத்தாண்டி வருவாயா நாயகன் சிம்பு, நாயகி த்ரிஷா, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தச் சந்திப்பில் த்ரிஷாவிடம் சினிமாவைத் தவிர வேறு சில கேள்விகள் கேட்கப்பட்டன. 

கேள்வி: எந்த சாமியார்களிடமாவது ஆசிர்வாதம் வாங்கியிருக்கீறீர்களா?
பதில்: மனிதனை கடவுளாக நினைக்க மாட்டேன். எந்த சாமியாரிடமும் இதுவரை நான் ஆசிர்வாதம் வாங்கியதில்லை. சாமியார்களை நான் நம்புவதில்லை. 

கேள்வி: நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் வெளிவருகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மீடியா என்பது பவர்ஃபுல் விஷயம். அதைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் பிரபலமானவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றார்.

ரஜினி தேடிய கேமராமேன்...!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ரஜினி, அப்படத்தின், நடிகர், நடிகைகள், ஏனைய படக்குழுவினர் எல்லோரையும் மனசார வாழ்த்தியுள்ளார். "எங்கே அந்த கேமராமேன்? கூப்பிடுங்க அவரை." என்று கணேஷை தேடிய ரஜினி அவரை பாராட்டினார். கணேஷ்தான், காக்கக் காக்க படத்தின் படப்பிடிப்பாளர் என நினைத்தாராம். கணேஷ், 'காக்கக் காக்க கேமராமேன்' பாத்திரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தார். காக்கக் காக்க படத்தின் உண்மையான படப்பிடிப்பாளர், R.D.ராஜசேகர். பின்னர் இந்த விடயம் ரஜினிக்கு சொல்லப்பட, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்..' என்று, ஆச்சரியமாக கூறினாராம்.


இயக்குனர் கெளதம் மேனன் இதுபற்றி கூறியது, "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்". கெளதம் மேனன் மேலும் கூறுகையில், "இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமாக விமர்சகர்கள் குடிப்பிட்டு கூறிய குறைகளை எனது அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்". என கூறினார்

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog