தங்களுக்கு தர வேண்டிய 11.59 கோடி ரூபாயை 12 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தாத வரை ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தை வெளியிட ஆஸ்கார் ஸ்டுடியோவை அனுமதிக்கக் கூடாது என அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சௌந்தர்யாவின் ஆஸ்கர் ஸ்டுடியோ சுல்தான் தி வாரியரை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸுடன் இணைந்து தயாரிக்க 2008ல் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்த காலகட்டம் முடிந்த பிறகும் பட வேலைகள் முடியாததால் ரிலையன்ஸ் தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அதன் பிறகு சௌந்தர்யாவின் ஆஸ்கர் ஸ்டுடியோ படத்தின் ஒட்டு மொத்த தயாரிப்பு பணியையும் ஏற்றுக் கொண்டது.
சுல்தான் தி வாரியர் பட வேலைகள் முடிந்து இன்னும் ஓரிரு மாதங்களில் படம் திரைக்கு வரவுள்ளது. இதனை அறிந்த ரிலையன்ஸ், ஆஸ்கர் ஸ்டுடியோ மீது தனது 11.59 கோடியை வட்டியுடன் செலுத்தும்படி வழக்கு தொடர்ந்துள்ளது.
Showing posts with label Rajini. Show all posts
Showing posts with label Rajini. Show all posts
Friday, 12 March 2010
சுல்தான் தி வாரியார் மீண்டும் சிக்கலில்...
Labels:
Actor,
Auscar Studio,
Rajini,
Reliance Media,
Sultan the Variyar,
நடிகர்
Friday, 5 March 2010
'தல' அஜித்தின் பிரச்சனை நீதிமன்றத்தில்.....
அண்மையில் நடந்த முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் நடிகர் அஜித்குமார் தையிரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்ன கருத்துக்களுக்காக பலரும் அவரது பேச்சை எதிர்க்கும் வகையில் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். இந்த வரிசையில் ஜக்குவார் தங்கமும் சில கருத்துக்களைக் கூறியதால், அவரின் வீடு அஜித்தின் ரசிகர்களால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். பின்னர் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்கள், அஜித், கருணாநிதியை சந்தித்துப் பேசிய பின்னர் தணிந்த்திருந்தன. ஜக்குவார் தங்கத்தின் பிரச்சனையும் சுமுகமாக முடிந்தது போல் இருந்தது. ஆனால் பூதம் மறுபடியும் வெளிக்கிளம்புகிறது.
ஜாக்குவார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அஜித் மற்றும் அவரது மனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர்தான் தனது வீடு தாக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் எனவும், தான் MGR போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும் மனு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார். ஜக்குவாரின் மனுவை ஏற்ற நீதிபதி, போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் ஏன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என இரண்டு கிழமைக்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அஜித் குமாரின் கருத்துக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவு தெரிவித்தார் என்பதும் அவரும் பின்னர் கண்டனங்களுக்கு உள்ளானார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Labels:
Ajith,
Cinema News,
Jaguar Thangam,
Karunaanithi,
Rajini,
அஜித்,
சினிமா செய்திகள்,
நடிகர்,
ஜக்குவார் தங்கம்
ரஜினி தேடிய கேமராமேன்...!
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ரஜினி, அப்படத்தின், நடிகர், நடிகைகள், ஏனைய படக்குழுவினர் எல்லோரையும் மனசார வாழ்த்தியுள்ளார். "எங்கே அந்த கேமராமேன்? கூப்பிடுங்க அவரை." என்று கணேஷை தேடிய ரஜினி அவரை பாராட்டினார். கணேஷ்தான், காக்கக் காக்க படத்தின் படப்பிடிப்பாளர் என நினைத்தாராம். கணேஷ், 'காக்கக் காக்க கேமராமேன்' பாத்திரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தார். காக்கக் காக்க படத்தின் உண்மையான படப்பிடிப்பாளர், R.D.ராஜசேகர். பின்னர் இந்த விடயம் ரஜினிக்கு சொல்லப்பட, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்..' என்று, ஆச்சரியமாக கூறினாராம்.
இயக்குனர் கெளதம் மேனன் இதுபற்றி கூறியது, "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்". கெளதம் மேனன் மேலும் கூறுகையில், "இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமாக விமர்சகர்கள் குடிப்பிட்டு கூறிய குறைகளை எனது அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்". என கூறினார்
இயக்குனர் கெளதம் மேனன் இதுபற்றி கூறியது, "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்". கெளதம் மேனன் மேலும் கூறுகையில், "இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமாக விமர்சகர்கள் குடிப்பிட்டு கூறிய குறைகளை எனது அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்". என கூறினார்
Subscribe to:
Posts (Atom)


