அண்மையில் நடந்த முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் நடிகர் அஜித்குமார் தையிரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்ன கருத்துக்களுக்காக பலரும் அவரது பேச்சை எதிர்க்கும் வகையில் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். இந்த வரிசையில் ஜக்குவார் தங்கமும் சில கருத்துக்களைக் கூறியதால், அவரின் வீடு அஜித்தின் ரசிகர்களால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். பின்னர் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்கள், அஜித், கருணாநிதியை சந்தித்துப் பேசிய பின்னர் தணிந்த்திருந்தன. ஜக்குவார் தங்கத்தின் பிரச்சனையும் சுமுகமாக முடிந்தது போல் இருந்தது. ஆனால் பூதம் மறுபடியும் வெளிக்கிளம்புகிறது.
ஜாக்குவார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அஜித் மற்றும் அவரது மனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர்தான் தனது வீடு தாக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் எனவும், தான் MGR போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும் மனு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார். ஜக்குவாரின் மனுவை ஏற்ற நீதிபதி, போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் ஏன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என இரண்டு கிழமைக்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அஜித் குமாரின் கருத்துக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவு தெரிவித்தார் என்பதும் அவரும் பின்னர் கண்டனங்களுக்கு உள்ளானார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment