கடந்த சனிக்கிழமை (27/02/2010) நடைபெற்ற 2009ம் ஆண்டிற்கான (54 வது) ஹிந்தி திரையுலகின் விருது வழங்கும் விழாவில் Delhi 6 திரைப்படத்தில் இசையமைத்ததற்காக A.R. ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது Paa படத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது அதே படத்தில் நடித்த வித்யா பாலனுக்கும் கிடைத்தது. அமிதாப் பச்சன் விழாவிற்கு சமூகமளிக்கவில்லை என்பதால் வித்யா பாலனே அமிதாப்பின் பரிசையும் வாங்கினர். ஐஸ்வர்யா ராய் சம்பந்தமாக எழுந்த சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அமிதாப்பும் அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவர்களது கம்பனிகளில் ஒன்றுதான் இந்த நிகழ்விற்கு பிரதான அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 3 Idiots படத்தை இயக்கிய ராஜ் குமார் ஹரிணிக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. 2009 ஆம் ஆண்டின் சிறந்த படமாகவும் இந்தப் படமே தெரிவு செய்யப்பட்டது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது அசினுக்கு கிடைத்தது. ஷாருக் கான் மற்றும் Saif ali khan ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினர். இந்த நிகழ்வில் பரிசு பெற்றவர்களின் பூரணமான தகவல் அறிய இங்கே அழுத்தவும். இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்கள் : | |||||||
Monday, 1 March 2010
Delhi 6 படத்திற்காக ரஹ்மான் விருது பெற்றார்
Labels:
A.R. ரகுமான்,
Amithap Bhachan,
Asin,
Awards,
Rahuman,
Vidya Balan,
அசின்,
வித்யா பாலன்,
விருதுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment