Showing posts with label Asin. Show all posts
Showing posts with label Asin. Show all posts

Monday, 1 March 2010

Delhi 6 படத்திற்காக ரஹ்மான் விருது பெற்றார்

கடந்த சனிக்கிழமை (27/02/2010) நடைபெற்ற 2009ம் ஆண்டிற்கான (54 வது) ஹிந்தி திரையுலகின் விருது வழங்கும் விழாவில் Delhi 6 திரைப்படத்தில் இசையமைத்ததற்காக A.R. ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார்.

சிறந்த நடிகருக்கான விருது Paa படத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது அதே படத்தில் நடித்த வித்யா பாலனுக்கும் கிடைத்தது. அமிதாப் பச்சன் விழாவிற்கு சமூகமளிக்கவில்லை என்பதால் வித்யா பாலனே அமிதாப்பின் பரிசையும் வாங்கினர். ஐஸ்வர்யா ராய் சம்பந்தமாக எழுந்த சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அமிதாப்பும் அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவர்களது கம்பனிகளில் ஒன்றுதான் இந்த நிகழ்விற்கு பிரதான அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

3 Idiots படத்தை இயக்கிய ராஜ் குமார் ஹரிணிக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. 2009 ஆம் ஆண்டின் சிறந்த படமாகவும் இந்தப் படமே தெரிவு செய்யப்பட்டது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது அசினுக்கு கிடைத்தது.

ஷாருக் கான் மற்றும் Saif ali khan ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினர்.

இந்த நிகழ்வில் பரிசு பெற்றவர்களின் பூரணமான தகவல் அறிய இங்கே அழுத்தவும்.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்கள் :   








Saturday, 27 February 2010

சுருதிஹாசனிடம் சென்ற அசினின் வாய்ப்பு


A.R.முருகதாஸ் இயக்கவிருக்கும் மூன்று மொழிகளில் மிகப்பெரிய செலவில் பிரமாண்டமாக எடுக்கப்படவிருக்கும் படத்தில் அசின் நடிப்பதாக கூறப்பட்டாலும் இப்போது அசின் அந்த வாய்ப்பை இழந்துவிட்டதாக தோன்றுகின்றது. அசின்இன் இடத்தில் சுருதிஹாசன் நடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சுருதிஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மகள், அவர் அண்மையில் அறிமுகமான ஒரு நடிகை.

கஜினி(ஹிந்தி) திரைப்படம் வெளியிடப்பட்டதிலிருந்து மிகப் பிரபலமாகியுள்ள இயக்குனரின் படத்தில் நடிக்க எவருமே ஆசைப்படுவர். அத்துடன் அசின், கஜினியின் தமிழ் பதிப்பிலும் நடித்திருந்தார். முறையான அறிவிப்புகள் எவையும் வெளியிடப்படாதிருந்தாலும், முருகதாசின் புதிய படத்தில் அசின் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

முருகதாசின் புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப்படத்தில் சூர்யா நடிப்பார் என தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி K சந்திரன் கடமையாற்றுகிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog