| கடந்த சனிக்கிழமை (27/02/2010) நடைபெற்ற 2009ம் ஆண்டிற்கான (54 வது) ஹிந்தி திரையுலகின் விருது வழங்கும் விழாவில் Delhi 6 திரைப்படத்தில் இசையமைத்ததற்காக A.R. ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது Paa படத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது அதே படத்தில் நடித்த வித்யா பாலனுக்கும் கிடைத்தது. அமிதாப் பச்சன் விழாவிற்கு சமூகமளிக்கவில்லை என்பதால் வித்யா பாலனே அமிதாப்பின் பரிசையும் வாங்கினர். ஐஸ்வர்யா ராய் சம்பந்தமாக எழுந்த சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அமிதாப்பும் அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவர்களது கம்பனிகளில் ஒன்றுதான் இந்த நிகழ்விற்கு பிரதான அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 3 Idiots படத்தை இயக்கிய ராஜ் குமார் ஹரிணிக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. 2009 ஆம் ஆண்டின் சிறந்த படமாகவும் இந்தப் படமே தெரிவு செய்யப்பட்டது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது அசினுக்கு கிடைத்தது. ஷாருக் கான் மற்றும் Saif ali khan ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினர். இந்த நிகழ்வில் பரிசு பெற்றவர்களின் பூரணமான தகவல் அறிய இங்கே அழுத்தவும். இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்கள் : | |||||||
Showing posts with label A.R. ரகுமான். Show all posts
Showing posts with label A.R. ரகுமான். Show all posts
Monday, 1 March 2010
Delhi 6 படத்திற்காக ரஹ்மான் விருது பெற்றார்
Labels:
A.R. ரகுமான்,
Amithap Bhachan,
Asin,
Awards,
Rahuman,
Vidya Balan,
அசின்,
வித்யா பாலன்,
விருதுகள்
Saturday, 27 February 2010
விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம்
இயக்குனர் : கெளதம் மேனன்
தயாரிப்பாளர் : மதன், ஜெயராமன், Elred
இசை அமைப்பாளர் : A.R. ரகுமான்
நடிகன் : சிலம்பரசன்
நடிகை : திரிஷா
இது ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் ஆக சிலம்பரசனும் ஜெஸ்ஸி ஆக திரிஷாவும் பிரதான பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான காட்சி அமைப்புகள், இனிமையான பின்னணிப் பாடல்கள் மற்றும் இதமான பின்னணி இசையுடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடியதாக படமாக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்திற்கும் குடும்பத்தாரிற்கும் பயந்து காதலை மறைத்து அது ஒரு நட்பு மட்டுந்தான் என சொல்லிக்கொள்ளுபவர்கள் எவ்வாறு தவிப்பார்கள் என்பதை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் எவ்வாறு பத்திக்கொள்ளும் என்பதை ரயில் பயணத்தின் மூலமாக நாசூக்காக காட்டியிருக்கிறார்கள்.
நகைச்சுவைக் காட்சி தனியாக இல்லாவிட்டலும் படம் விறுவிறுப்பாக தொய்வில்லாமல் நகர்கிறது. இரண்டு சண்டைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளது.
படத்தில் முத்தக்காட்சிகளுக்கு குறைவில்லை. சிம்பு கமலை முந்திவிடுவாரோ என எண்ணத்தோன்றுகிறது.
பல்வேறு திருப்பங்களுடன் நகரும் கதையில் கடைசியில் காதலர்கள் ஒன்று சேருகிரர்களா என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அழகான காட்சியமைப்புகளும், இதமான பின்னணி இசையும் படத்திற்கு வலுக்கேர்கின்றன.
விமர்சனம் எனும் பெயரில் திரைக் கதையை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Labels:
A.R. ரகுமான்,
Film Reviews,
Films,
Rahuman,
Silambarasan,
Simbu,
Trisha,
சிம்பு,
சிலம்பரசன்,
திரிஷா,
திரைவிமர்சனம்
Subscribe to:
Posts (Atom)








