Showing posts with label திரிஷா. Show all posts
Showing posts with label திரிஷா. Show all posts

Thursday, 11 March 2010

புதிய ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்துகிறார் கமல் ஹாசன்.

திறமையான புதிய பல கலைஞர்கள் கமல் ஹாசனால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். அண்மைய காலங்களில் கமலினால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் : இயக்குனர் சக்ரி, இசையமைப்பாளர் ஸ்ருதி மற்றும் நவீன திரைக்கதை எழுத்தாளர் இரா.முருகன். இரா.முருகன், கமலின் கடைசியாக வெளிவந்த 'உன்னை போல் ஒருவன்' படத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தார்.


கமலின் அடுத்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட இருப்பவர் ஒரு கேமராமன். உதயாநிதி ஸ்டாலின் தயாரிப்பில் K.S.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கமலின் அடுத்த படத்திலேயே, எழுத்தாளர் ஞானியின் மகன் மனுஷ் நந்தன் ஒரு ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்யப்படுகிறார். இவர் பல ஒளிப்பதிவாளர்களிடம் துணை ஒளிப்பதிவாளராக கடமையாற்றியிருக்கிறார். அண்மையில் ஹிந்தி திரையுலகில் வெளியான 'My name is Kaan' எனும் படத்தின் படப்பிடிப்பாளருக்கு துணையாக கடமையாற்றிய மனுஷ், ஒளிப்பதிவாளராக சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ளார்.


கமலின் அடுத்த படத்தின் புகைப்படப் பிடிப்பு, மார்ச் மாதம் 20 ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த நிகழ்வில், கமல் ஹாசன், மாதவன் மற்றும் த்ரிஷா ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

Sunday, 7 March 2010

த்ரிஷாவின் திடீர் முடிவு

த்ரிஷா நடித்து அண்மையில் வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. த்ரிஷா மிகவும் சந்தோசத்திலிருக்கிறார். இந்தப் படத்தில் த்ரிஷா, ஜெஸ்ஸி எனும் வேடத்தில் நடித்திருக்கிறார். த்ரிஷாவின் ஜோடியாக சிம்பு, கார்த்திக் எனும் வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹைலைட் ஆக சிம்பு - த்ரிஷா முத்தக் காட்சிகள் அமைந்திருந்தன. அப்படி நடித்ததில் தப்பேதுமில்லை என த்ரிஷா கூறியிருந்தார்.

ஆனால் இப்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்த வேறு ஒரு விடயத்தை இனி வேறு எந்தப்படத்திலும் செய்யப்போவதில்லை என த்ரிஷா முடிவெடுத்திருக்கிறார். அது என்ன தெரியுமா? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா ஒரு வயது கூடிய பெண்ணாக அதாவது ஹீரோவிலும் பார்க்க வயது கூடிய பெண்ணாக நடித்திருந்தார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவிலும் பார்க்க வயது கூடிய ஹீரோயின்கள், உயரம் கூடிய ஹீரோயின்கள் போன்ற பாத்திரங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் இவ்வாறான வயது கூடிய பாத்திரங்களில் இனிமேல் நடிப்பதில்லை என த்ரிஷா முடிவெடுத்திருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் வயது கூடிய பெண் ஆக நடிக்க முதலில் மறுத்திருக்கிறார். ஆனால் இயக்குனர் கெளதம் மேனன், படத்திற்கு இவ்வாறான ஒரு பாத்திரம் தேவை என ஒருவழியாக த்ரிஷாவிற்கு எடுத்துக் கூறி, த்ரிஷாவை சம்மதிக்கவைத்திருந்தார். எனினும், அவ்வாறான பாத்திரங்கள் இனி நடிப்பதில்லை என்ற முடிவிற்கு த்ரிஷா வந்திருக்கிறார்.

Friday, 5 March 2010

சாமியார்களை நம்பாத த்ரிஷா ... !


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விண்ணைத்தாண்டி வருவாயா நாயகன் சிம்பு, நாயகி த்ரிஷா, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தச் சந்திப்பில் த்ரிஷாவிடம் சினிமாவைத் தவிர வேறு சில கேள்விகள் கேட்கப்பட்டன. 

கேள்வி: எந்த சாமியார்களிடமாவது ஆசிர்வாதம் வாங்கியிருக்கீறீர்களா?
பதில்: மனிதனை கடவுளாக நினைக்க மாட்டேன். எந்த சாமியாரிடமும் இதுவரை நான் ஆசிர்வாதம் வாங்கியதில்லை. சாமியார்களை நான் நம்புவதில்லை. 

கேள்வி: நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் வெளிவருகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மீடியா என்பது பவர்ஃபுல் விஷயம். அதைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் பிரபலமானவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றார்.

Sunday, 28 February 2010

மீண்டும் காதலில் சிம்பு.......?

சிலகாலமாக நயன்தாராவை காதலித்து பிரிந்து தன்பாட்டில் சென்றவர் சிம்பு. இது யாவரும் அறிந்த பழைய விடயம். ஆனால் நயன்தாரா இப்போது பிரபு தேவாவை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்படுகின்றது.


சரி, சிம்புவின் விடயத்துக்கு வருவோம்... சிம்பு திரிஷாவை காதலிப்பதாக புதிதாக தகவல் பரவ ஆரம்பித்துள்ளது. இருவரும், புதிதாக திரைக்குவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நெருக்கமாக நடித்திருந்தனர். அதிலும் முத்தக்காட்சிகளில் நெருக்கத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.... ஆனால் இந்தக் கிசு கிசுவை மறுத்த சிம்பு, தான் எவரையும் காதலிக்கவில்லை என்றும் தான் தனது வேலையைத்தான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.


மேலும், தனக்கு ஒரு சாதாரணமான பெண் போதும் என்றும் சிறப்பான பெண் தேவையில்லை என்றும் சிம்பு கூறினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எனது பாத்திரத்தை மிகவும் நேசித்தேன். எனது அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை. K.V.ஆனந்தின் படத்தில் நடிப்பதற்கு எண்ணியிருந்தேன். 


ஆனால் படம் தொடங்குவதற்கு முன்னரே எனது சிகையலங்காரத்தை மாற்றுமாறும் அவர் சொல்லுவதுபோல் செய்யுமாறும் கூறுகிறார். இவ்வாறான நிபந்தனைகளை ஏற்க மறுத்து அவரது படத்திலிருந்து விலகிவிட்டேன் எனவும் சிம்பு கூறினார்.  

Saturday, 27 February 2010

நான் அவசரத்தில் இல்லை : திரிஷா

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் நேற்று திரைக்கு வந்ததுடன், திரிஷாவின் பாரம் குறைந்துவிட்டது. இருந்தாலும், அடுத்த வேலைக்கு தான் அவசரப்படவில்லை என்றும் கையொப்பம் இட முன்னர் தான் கதையை தெரிவு செய்ய வேண்டும் என்றும் சொல்ல்கிறார்.

"இப்போது எனது திரைப் பயணம் முக்கிய கட்டத்திலிருப்பதால், கவனமாக இருக்க நினைக்கிறேன். நல்ல திரைக்கதையை தெரிவு செய்து ஒரே நேரத்தில் சில படங்களில் மாத்திரமே கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். எண்ணிக்கை விளையாட்டில் பிரயோசனம் இல்லை." என திரிஷா கூறினார்.

முயற்சியும் திறமையும் கொண்ட ஒவ்வொரு நடிகருக்கும் சினிமா துறையில் இடமிருக்கிறது என்று கூறிய திரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா படம் பற்றி  கூறியதாவது, "எதிர்பார்ப்புகள் என்னை பதட்டமடைய செய்தன. எப்படி என்றாலும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்னை மகிழ்சியடைய செய்கின்றன. ஏனென்றால் திரைக்கதை ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டது.  எனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்களில் அதுவும் ஒன்று."

விண்ணை தாண்டி வருவாயா படங்கள்

       

விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம்


இயக்குனர் : கெளதம் மேனன்
தயாரிப்பாளர் : மதன், ஜெயராமன், Elred
இசை அமைப்பாளர் : A.R. ரகுமான்
நடிகன் : சிலம்பரசன்
நடிகை : திரிஷா

இது ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் ஆக சிலம்பரசனும் ஜெஸ்ஸி ஆக திரிஷாவும் பிரதான பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான காட்சி அமைப்புகள், இனிமையான பின்னணிப் பாடல்கள் மற்றும் இதமான பின்னணி இசையுடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடியதாக படமாக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்திற்கும் குடும்பத்தாரிற்கும் பயந்து காதலை மறைத்து அது ஒரு நட்பு மட்டுந்தான் என சொல்லிக்கொள்ளுபவர்கள் எவ்வாறு தவிப்பார்கள் என்பதை  மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் எவ்வாறு பத்திக்கொள்ளும் என்பதை ரயில் பயணத்தின் மூலமாக நாசூக்காக காட்டியிருக்கிறார்கள்.

நகைச்சுவைக் காட்சி தனியாக இல்லாவிட்டலும் படம் விறுவிறுப்பாக தொய்வில்லாமல் நகர்கிறது. இரண்டு சண்டைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளது.

படத்தில் முத்தக்காட்சிகளுக்கு குறைவில்லை. சிம்பு கமலை முந்திவிடுவாரோ என எண்ணத்தோன்றுகிறது.

 பல்வேறு திருப்பங்களுடன் நகரும் கதையில் கடைசியில் காதலர்கள் ஒன்று சேருகிரர்களா என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அழகான காட்சியமைப்புகளும், இதமான பின்னணி இசையும் படத்திற்கு வலுக்கேர்கின்றன.

விமர்சனம் எனும் பெயரில் திரைக் கதையை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
   
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog