திறமையான புதிய பல கலைஞர்கள் கமல் ஹாசனால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். அண்மைய காலங்களில் கமலினால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் : இயக்குனர் சக்ரி, இசையமைப்பாளர் ஸ்ருதி மற்றும் நவீன திரைக்கதை எழுத்தாளர் இரா.முருகன். இரா.முருகன், கமலின் கடைசியாக வெளிவந்த 'உன்னை போல் ஒருவன்' படத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தார்.
கமலின் அடுத்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட இருப்பவர் ஒரு கேமராமன். உதயாநிதி ஸ்டாலின் தயாரிப்பில் K.S.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கமலின் அடுத்த படத்திலேயே, எழுத்தாளர் ஞானியின் மகன் மனுஷ் நந்தன் ஒரு ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்யப்படுகிறார். இவர் பல ஒளிப்பதிவாளர்களிடம் துணை ஒளிப்பதிவாளராக கடமையாற்றியிருக்கிறார். அண்மையில் ஹிந்தி திரையுலகில் வெளியான 'My name is Kaan' எனும் படத்தின் படப்பிடிப்பாளருக்கு துணையாக கடமையாற்றிய மனுஷ், ஒளிப்பதிவாளராக சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ளார்.
கமலின் அடுத்த படத்தின் புகைப்படப் பிடிப்பு, மார்ச் மாதம் 20 ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த நிகழ்வில், கமல் ஹாசன், மாதவன் மற்றும் த்ரிஷா ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
Showing posts with label Mathavan. Show all posts
Showing posts with label Mathavan. Show all posts
Thursday, 11 March 2010
Subscribe to:
Posts (Atom)
