Showing posts with label Gallary. Show all posts
Showing posts with label Gallary. Show all posts

Monday, 8 March 2010

"பையா" பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்கள்

லிங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னாவின் "பையா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களில் சில...

பையா படத்தின் காட்சிகளை பார்க்க இங்கே அழுத்தங்கள்.

Tuesday, 2 March 2010

ஆயுத போராட்டம் திரைப்படத்தின் புகைப்படங்கள்.

ஆயுத போராட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. ஆயுத போராட்டம் திரைப்படத்தில் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். அவரேதான் இந்தப்படத்தை இயக்குகிறார். ஜெய் அகஷிற்கு ஜோடியாக ப்ரீத்தி மீனல் மற்றும் அனிதா ரெட்டி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சசிகிரண், ரேனுகுண்டா feme , தீப்பெட்டி கணேஷ் நிராஜ் புரோஹித், ஆதித் ஸ்ரீநிவாஸ் மற்றும் கோபி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப்படத்திற்கு நந்தன் ராஜ் இசையமைக்கிறார். சாய் சதீஷ் ஒளிப்பதிவாளராக கடைமையாற்றுகிறார். படப்பிடிப்பின் பெரும்பான்மையான பகுதிகளை தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் சீனாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். மே மாதம் 14 ம் திகதி இப்படத்தை வெளியிட எண்ணியுள்ளனர்.

ஜெய் அகஷின் கருத்துப்படி, இந்தப் படம் காதலுடன் கூடிய சண்டைக் கதையை அடிப்படையாக கொண்டது என தெரிகிறது. ஆயுத போராட்டம் திரைப்படத்தின் கதையானது, இலங்கை, இந்திய போராளிகளின் கதையை அடிப்படையாக கொண்டது எனவும் தெரியவருகிறது. ஜெய் அகஷின் காதலன் காதலி படப்பிடிப்பு நிறைவடைந்து, படம் வெளியிட தயாராக உள்ளதாகவும், விரைவில் வெளியிட்டப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.












Monday, 1 March 2010

"பையா" - படங்களின் தொகுப்பு

லிங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னாவின் நடிப்பில் மார்ச் மாதத்தில் வெளிவரவிருக்கும் "பையா" படத்தின் படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை, IndiaGlitz இலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் படங்களைப் பார்க்க விரும்பினால், இப்படத் தொகுப்பின் கீழே உள்ள இணையத்தள முகவரிக்கு செல்லுங்கள்.


மேலும் படங்கள் பார்க்க, இங்கே அழுத்துக.

Saturday, 27 February 2010

அஞ்சலி தேவி சதாபிஷேகம்

கறுப்பு - வெள்ளை காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த அஞ்சலி தேவியின் சதாபிஷேகம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த நண்பர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் கருணாநிதி அவரது பாரியார் தயாளு அம்மாள் சகிதம் விழாவிற்கு வந்து அஞ்சலி தேவியை வாழ்த்தினார்.

அவரது நண்பர்களும் தொழல்துறைசார் நண்பர்களுமான, நடிகர்கள் ராஜா சுலோச்சனா, S.N.லக்ஷ்மி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி, ஊர்வசி சாரதா, காஞ்சனா, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, குட்டி பத்மினி, S.V.சேகர், ரம்யா கிருஷ்ணன், M.N.ராஜன், ராஜஸ்ரீ, பிரபு மற்றும் ராம்குமாரும் அவரது மனைவியும், பாடகர் P.சுசீலா, முக்தா சீனிவாசன் மற்றும் திரைத்துறை செய்தியாளர் ஆனந்தன் ஆகியோர் அஞ்சலி தேவியின் வாழ்த்தை பெற்றனர்.

23 ம் திகதி ஐப்பசி மாதம் 1928 ம் ஆண்டு காக்கிநாட மாவட்டத்திலுள்ள பெட்டபுரத்தில் பிறந்த அஞ்சலி தேவி, தனது 8வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவர் 'கொல்ல பாமா' எனும் படத்தில் C.புல்லையாவினால் மோகினி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அன்றிலிருந்து வெற்றிநடை போட்ட அஞ்சலி தேவி 400௦௦ இற்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 40 களிலும் 50 களிலும் எல்லா பிரபலமான நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

சத்திய சாயி பாபாவின் பக்தையான அஞ்சலி தேவி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பொன்னான காலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த நடிகை ஆவார்.

(மேலுள்ள தகவல்களும் கீழுள்ள படங்களும் Indiaglitz இலிருந்து எடுக்கப்பட்டவை)
மேலும் படங்கள் பார்க்க விரும்பினால் IndiaGlitz இற்கு விஜயம் செய்க.


விண்ணை தாண்டி வருவாயா படங்கள்

       
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog