Showing posts with label தமன்னா. Show all posts
Showing posts with label தமன்னா. Show all posts

Wednesday, 10 March 2010

"சிறுத்தை"யில் கார்த்தியுடன் தமன்னா....


கார்த்தி - தமன்னாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் "பையா"வில் இருவரும் நன்றாக நடித்துள்ளனர். அண்மையில் பையா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதில் பையா நாயகன் கார்த்தி கூறியதாவது : இந்தப் படத்தில் மக்கள் எனது புதிய தோற்றத்தைக் காண்பார்கள். தமன்னா கூறியதாவது : ஒரு நடிகைக்கு கிடைக்க வேண்டிய இலட்சியமான பாத்திரம் இந்தப் படத்தில்தான் எனக்கு கிடைத்தது.

தமிழ் திரையுலகின் தற்போதைய முதல்தர ஜோடி கார்த்தி - தமன்னா தான் சிறுத்தை படத்திலும் நடிப்பார்கள். சிறுத்தை படத்தை கதிர் இயக்குகிறார். இவர் தெனாவெட்டு எனும் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை படம் ஒரு வருடத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. எனினும் கார்த்தி 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் பையாவில் நடித்துக்கொண்டிருந்ததால் சிறுத்தை படம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது கார்த்திக்கு நேரம் கிடைத்துள்ளதால் சிறுத்தை பற்றிய இன்னுமொரு அறிவிப்பு வெளிவரும்.

படங்களுக்கு நடிகையை தெரிவு செய்யும் போது பெரும்பாலும் தமன்னாவின் பெயரைத்தான் பலரும் பரிந்துரைகின்றனர்.

Friday, 5 March 2010

சமாதானமா போக நான் புறா இல்லடா.... சுறா !

"சமாதானமா போக நான் புறா இல்லடா...சுறா !", இதுதான் விஜயின் புதிய பஞ்ச் டயலாக். விஜயும் பஞ்ச் டயலாக் உம் இணை பிரியாத நண்பர்கள் போல. பஞ்ச் டயலாக் இல்லாத விஜயின் படமே இல்லை என கூறலாம். S.P.ராஜ்குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் விஜயின் 50 வது படமான 'சுறா'வில் மேற்கூறப்பட்ட பஞ்ச் டயலாக் இடம்பெறுவதாகவும், வேறு சில பஞ்ச் டயலாக்குகளும்  சுறாவில் இருக்குமெனவும் ஒரு கதை அடிபடுகிறது.

சுறா படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் அதேவேளை விஜயை காதலிக்கும் கல்லூரி மாணவியாக தமன்னா நடிக்கிறார். காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது.

Tuesday, 2 March 2010

தமன்னாவின் பேட்டி

தில்லாலங்கடி படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் தமன்னாவின் பதில்களும்......

தில்லாலங்கடி பற்றி?
தெலுங்கில் வெற்றிபெற்ற "Kick" படத்தின் மறுபதிப்புதான் இந்தப் படம். ஜெயம் ராஜா இயக்குகிறார். நான் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறேன். இந்தப்படத்தில் எங்களது ஜோடி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். பாடல்கள் நன்றாக வந்துள்ளன. எனக்காக வித்தியாசமான நடன அசைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் ராஜேஷ்கர் என்னை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள்.

விஜயின் சுறாவில் என்ன பாத்திரத்தில் நடிக்கிறீர்கள்?
அந்தப்படத்தில் S.P.ராஜ்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறேன். நகரத்துப் பெண் வேடம். விஜயுடன் முதல் தடவையாக இணைந்து நடிக்கிறேன்.

உங்களுக்கும் நயந்தாராவிற்குமிடையில் எதாவது கருத்து வேறுபாடு இருக்கிறதா?
சில காரணங்களுக்காக நயன்தாரா "பையா" வில் நடிக்கவில்லை. அவருடைய இடத்தில் யாரவது ஒருவர் நடிக்கவேண்டியிருந்தது. அவர்கள் என்னை தெரிவுசெயதர்கள். கதை எனக்கு பிடித்திருந்தது. அத்துடன் நான் கேட்ட சம்பளத்தையும் தந்தார்கள். எனவே நான் அந்தப் படத்தில் நடித்தேன். அதில் எந்த தப்பும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போல எனக்கும் நயந்தாரவிற்குமிடையில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஹிந்தி படங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பம் உண்டா?
தமிழில் எனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டேன். இப்போதைக்கு ஹிந்தியில் நடிக்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும், நல்ல கதையுடன் சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடமாட்டேன்.

Monday, 1 March 2010

"பையா" - படங்களின் தொகுப்பு

லிங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னாவின் நடிப்பில் மார்ச் மாதத்தில் வெளிவரவிருக்கும் "பையா" படத்தின் படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை, IndiaGlitz இலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் படங்களைப் பார்க்க விரும்பினால், இப்படத் தொகுப்பின் கீழே உள்ள இணையத்தள முகவரிக்கு செல்லுங்கள்.


மேலும் படங்கள் பார்க்க, இங்கே அழுத்துக.

எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும் கார்த்தியின் "பையா".

2010 ஆம் ஆண்டின் முதல் நாளில் "புகைப்படம்" திரைப்படம் திரைக்கு வந்ததிலிருந்து இதுவரையான இரண்டு மாத காலப்பகுதியில் 15 திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. எனினும், எந்த ஒரு திரைப்படமும், மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. தமிழ் ரசிகர்களும், தமிழ்த்  திரைத்துறையினரும் மிகப்பெரிய வெற்றிப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.

ரஜினி மற்றும் கமல்ஹாசன் தவிர்ந்த பெரும்பாலான ஏனைய பெரிய நடிகர்களின் படங்கள் இந்த வருடத்தில் திரைக்கு வந்துள்ளன. எனினும் அவை எவையும், எதிபார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

விஜயின் வேட்டைக்காரன், தனுஷின் குட்டி, கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன், சரத்குமாரின் ஜக்குபாய், அஜித்தின் அசல், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஸ்ரீகாந்தின் ரசிக்கும் சீமானே, பிரசன்னா - சிபிராஜின் நாணயம் - இவை எதுவுமே அவற்றின் வெளியீட்டு நாளில் பெற்ற வரவேற்பை நீண்ட நாட்களுக்கு தக்கவைக்கவில்லை. ஏனைய படங்களான, போர்க்களம், கதை, மற்றும் தைரியம் என்பனகூட அவற்றின் வெளியீட்டு நாளில் சிறிய வரவேற்பினை பெற்றிருந்தன.

இதுவரை வெளிவந்த படங்களில் "தமிழ் படம்" மட்டுமே தயாரிப்பளர்களையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "கோவா" வெற்றிப்படமென சொல்லப்படுகிறது. சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா  இப்போதுதான் திரைக்கு வந்துள்ளது. தமிழ் சினிமா இந்த வருடத்தில் பெரு வெற்றியைப் பெறவில்லை.

இப்போது எல்லோர் கவனமும், மார்ச் மாதத்தில் வெளியிடப்படவிருக்கும் "பையா" படத்தின்மீதுதான் இருக்கிறது. சிலதடவை தள்ளிப்போடப்பட்ட இப்படத்தின் வெளியீடு, இந்ததடவை தள்ளிபோகாது என எதிர்பார்க்கலாம். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. பையா திரைப்படம், விடுமுறை காலத்தை அண்டி வெளியிடப்படவிருப்பதால் இலகுவாக வெற்றியடையும் வாய்ப்புள்ளது. படம் வெற்றியடையுமா?

"பையா" - படங்களின் தொகுப்பு இங்கே.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog