| தில்லாலங்கடி படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் தமன்னாவின் பதில்களும்...... தில்லாலங்கடி பற்றி? தெலுங்கில் வெற்றிபெற்ற "Kick" படத்தின் மறுபதிப்புதான் இந்தப் படம். ஜெயம் ராஜா இயக்குகிறார். நான் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறேன். இந்தப்படத்தில் எங்களது ஜோடி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். பாடல்கள் நன்றாக வந்துள்ளன. எனக்காக வித்தியாசமான நடன அசைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் ராஜேஷ்கர் என்னை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள். விஜயின் சுறாவில் என்ன பாத்திரத்தில் நடிக்கிறீர்கள்? அந்தப்படத்தில் S.P.ராஜ்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறேன். நகரத்துப் பெண் வேடம். விஜயுடன் முதல் தடவையாக இணைந்து நடிக்கிறேன். உங்களுக்கும் நயந்தாராவிற்குமிடையில் எதாவது கருத்து வேறுபாடு இருக்கிறதா? சில காரணங்களுக்காக நயன்தாரா "பையா" வில் நடிக்கவில்லை. அவருடைய இடத்தில் யாரவது ஒருவர் நடிக்கவேண்டியிருந்தது. அவர்கள் என்னை தெரிவுசெயதர்கள். கதை எனக்கு பிடித்திருந்தது. அத்துடன் நான் கேட்ட சம்பளத்தையும் தந்தார்கள். எனவே நான் அந்தப் படத்தில் நடித்தேன். அதில் எந்த தப்பும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போல எனக்கும் நயந்தாரவிற்குமிடையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஹிந்தி படங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பம் உண்டா? தமிழில் எனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டேன். இப்போதைக்கு ஹிந்தியில் நடிக்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும், நல்ல கதையுடன் சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடமாட்டேன். |
Showing posts with label தில்லாலங்கடி. Show all posts
Showing posts with label தில்லாலங்கடி. Show all posts
Tuesday, 2 March 2010
தமன்னாவின் பேட்டி
Labels:
Interviews,
Jeyam Ravi,
Nayanthara,
Thamana,
Thillalankadi,
தமன்னா,
தில்லாலங்கடி,
நயந்தாரா,
பேட்டி,
ஜெயம் ரவி
Subscribe to:
Posts (Atom)

