2010 ஆம் ஆண்டின் முதல் நாளில் "புகைப்படம்" திரைப்படம் திரைக்கு வந்ததிலிருந்து இதுவரையான இரண்டு மாத காலப்பகுதியில் 15 திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன. எனினும், எந்த ஒரு திரைப்படமும், மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. தமிழ் ரசிகர்களும், தமிழ்த் திரைத்துறையினரும் மிகப்பெரிய வெற்றிப்படத்திற்காக காத்திருக்கின்றனர். ரஜினி மற்றும் கமல்ஹாசன் தவிர்ந்த பெரும்பாலான ஏனைய பெரிய நடிகர்களின் படங்கள் இந்த வருடத்தில் திரைக்கு வந்துள்ளன. எனினும் அவை எவையும், எதிபார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. விஜயின் வேட்டைக்காரன், தனுஷின் குட்டி, கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன், சரத்குமாரின் ஜக்குபாய், அஜித்தின் அசல், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஸ்ரீகாந்தின் ரசிக்கும் சீமானே, பிரசன்னா - சிபிராஜின் நாணயம் - இவை எதுவுமே அவற்றின் வெளியீட்டு நாளில் பெற்ற வரவேற்பை நீண்ட நாட்களுக்கு தக்கவைக்கவில்லை. ஏனைய படங்களான, போர்க்களம், கதை, மற்றும் தைரியம் என்பனகூட அவற்றின் வெளியீட்டு நாளில் சிறிய வரவேற்பினை பெற்றிருந்தன. இதுவரை வெளிவந்த படங்களில் "தமிழ் படம்" மட்டுமே தயாரிப்பளர்களையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "கோவா" வெற்றிப்படமென சொல்லப்படுகிறது. சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா இப்போதுதான் திரைக்கு வந்துள்ளது. தமிழ் சினிமா இந்த வருடத்தில் பெரு வெற்றியைப் பெறவில்லை. இப்போது எல்லோர் கவனமும், மார்ச் மாதத்தில் வெளியிடப்படவிருக்கும் "பையா" படத்தின்மீதுதான் இருக்கிறது. சிலதடவை தள்ளிப்போடப்பட்ட இப்படத்தின் வெளியீடு, இந்ததடவை தள்ளிபோகாது என எதிர்பார்க்கலாம். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. பையா திரைப்படம், விடுமுறை காலத்தை அண்டி வெளியிடப்படவிருப்பதால் இலகுவாக வெற்றியடையும் வாய்ப்புள்ளது. படம் வெற்றியடையுமா? "பையா" - படங்களின் தொகுப்பு இங்கே. |
Monday, 1 March 2010
எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும் கார்த்தியின் "பையா".
Labels:
Cinema News,
Karthi,
Paiyaa,
Thamana,
கார்த்தி,
சினிமா செய்திகள்,
தமன்னா,
பையா,
லிங்குசாமி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment