Saturday 6 March 2010

எழுத்தாளர்களைப் பேட்டி எடுக்கிறார் கமல்....

கமல், சினிமாத்துறையில் மட்டுமல்ல, இலக்கியத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். அவர் மய்யம் என்ற பத்திரிகையை சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடத்திவந்தார். அவரது நோக்கம் தனது இரசிகர்களை இலக்கியத்தின் பக்கம் இழுப்பதாகவே அமைந்திருந்தது. தனது பிறந்த நாளில் இலக்கியவாதிகளை வரவழைத்து அவர்களது சொற்பொழிவுகளை தனது ரசிகர்களை வலுக்கட்டாயமாக கேட்கவைப்பது கமலின் வாடிக்கை. என்ன காரணத்தினாலோ, மய்யம் பத்திரிக்கை சில ஆண்டுகளாக வெளியிடப்படவில்லை.

இப்போது, மய்யம் இதழை, மின்னிதழாக மீண்டும் கொண்டுவருவதில் தீவிர கவனம் செல்லுத்துகிறார். மின்னிதழிலும் இல்லக்கியவாதிகளின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார் கமல். இதற்காக எழுத்தாளர்களை பேட்டிகாண நினைத்த கமல், அதை தானே செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என எண்ணி, இப்போது எழுத்தாளர்களை தேடிக்கொண்டிருக்கிறார். இதற்காகவே ஒருபகுதி நேரத்தை ஒதுக்கியிருக்கிறார். அவரது இந்த முயற்சி வாசகர்களை மேலும் கவரும் என்பதில் ஐயமில்லை.

தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல், கேரளா எழுத்தாளர்களையும் கமல் தேடிச் செல்லப் போகின்றாராம். கமல் முதலில் பேட்டி எடுத்த எழுத்தாளர், நீல.பத்மநாபன் அவர். விரைவில் மய்யம் மின்னிதழை இணையத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

1 comments:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

கமல் அவரை புதுப்பித்துக் கொள்வது மட்டுமல்லாமல் அவர் தன்னை ஒரு மனிதராய் நிரூபித்தும் வருகிறார், நாமெல்லாம் இன்னும் மனிதரின் கடை தூரத்திலேயே இருக்கிறோம் போல்.

கமலுக்கு நம் வாழ்த்தையும் சற்று உடன் பாட்டையும் கொடுப்போம்.

வித்யாசாகர்
குவைத்

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog