கார்த்தி - தமன்னாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் "பையா"வில் இருவரும் நன்றாக நடித்துள்ளனர். அண்மையில் பையா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதில் பையா நாயகன் கார்த்தி கூறியதாவது : இந்தப் படத்தில் மக்கள் எனது புதிய தோற்றத்தைக் காண்பார்கள். தமன்னா கூறியதாவது : ஒரு நடிகைக்கு கிடைக்க வேண்டிய இலட்சியமான பாத்திரம் இந்தப் படத்தில்தான் எனக்கு கிடைத்தது.
தமிழ் திரையுலகின் தற்போதைய முதல்தர ஜோடி கார்த்தி - தமன்னா தான் சிறுத்தை படத்திலும் நடிப்பார்கள். சிறுத்தை படத்தை கதிர் இயக்குகிறார். இவர் தெனாவெட்டு எனும் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுத்தை படம் ஒரு வருடத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. எனினும் கார்த்தி 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் பையாவில் நடித்துக்கொண்டிருந்ததால் சிறுத்தை படம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது கார்த்திக்கு நேரம் கிடைத்துள்ளதால் சிறுத்தை பற்றிய இன்னுமொரு அறிவிப்பு வெளிவரும்.
படங்களுக்கு நடிகையை தெரிவு செய்யும் போது பெரும்பாலும் தமன்னாவின் பெயரைத்தான் பலரும் பரிந்துரைகின்றனர்.









