Saturday, 27 February 2010

அஞ்சலி தேவி சதாபிஷேகம்

கறுப்பு - வெள்ளை காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த அஞ்சலி தேவியின் சதாபிஷேகம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த நண்பர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் கருணாநிதி அவரது பாரியார் தயாளு அம்மாள் சகிதம் விழாவிற்கு வந்து அஞ்சலி தேவியை வாழ்த்தினார்.

அவரது நண்பர்களும் தொழல்துறைசார் நண்பர்களுமான, நடிகர்கள் ராஜா சுலோச்சனா, S.N.லக்ஷ்மி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி, ஊர்வசி சாரதா, காஞ்சனா, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, குட்டி பத்மினி, S.V.சேகர், ரம்யா கிருஷ்ணன், M.N.ராஜன், ராஜஸ்ரீ, பிரபு மற்றும் ராம்குமாரும் அவரது மனைவியும், பாடகர் P.சுசீலா, முக்தா சீனிவாசன் மற்றும் திரைத்துறை செய்தியாளர் ஆனந்தன் ஆகியோர் அஞ்சலி தேவியின் வாழ்த்தை பெற்றனர்.

23 ம் திகதி ஐப்பசி மாதம் 1928 ம் ஆண்டு காக்கிநாட மாவட்டத்திலுள்ள பெட்டபுரத்தில் பிறந்த அஞ்சலி தேவி, தனது 8வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவர் 'கொல்ல பாமா' எனும் படத்தில் C.புல்லையாவினால் மோகினி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அன்றிலிருந்து வெற்றிநடை போட்ட அஞ்சலி தேவி 400௦௦ இற்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 40 களிலும் 50 களிலும் எல்லா பிரபலமான நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

சத்திய சாயி பாபாவின் பக்தையான அஞ்சலி தேவி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பொன்னான காலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த நடிகை ஆவார்.

(மேலுள்ள தகவல்களும் கீழுள்ள படங்களும் Indiaglitz இலிருந்து எடுக்கப்பட்டவை)
மேலும் படங்கள் பார்க்க விரும்பினால் IndiaGlitz இற்கு விஜயம் செய்க.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog