Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Friday, 5 March 2010

'தல' அஜித்தின் பிரச்சனை நீதிமன்றத்தில்.....

அண்மையில் நடந்த முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் நடிகர் அஜித்குமார் தையிரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்ன கருத்துக்களுக்காக பலரும் அவரது பேச்சை எதிர்க்கும் வகையில் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். இந்த வரிசையில் ஜக்குவார் தங்கமும் சில கருத்துக்களைக் கூறியதால், அவரின் வீடு அஜித்தின் ரசிகர்களால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். பின்னர் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்கள், அஜித், கருணாநிதியை சந்தித்துப் பேசிய பின்னர் தணிந்த்திருந்தன. ஜக்குவார் தங்கத்தின் பிரச்சனையும் சுமுகமாக முடிந்தது போல் இருந்தது. ஆனால் பூதம் மறுபடியும் வெளிக்கிளம்புகிறது.

ஜாக்குவார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அஜித் மற்றும் அவரது மனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர்தான் தனது வீடு தாக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் எனவும், தான் MGR போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும் மனு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார். ஜக்குவாரின் மனுவை ஏற்ற நீதிபதி, போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் ஏன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என இரண்டு கிழமைக்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அஜித் குமாரின் கருத்துக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவு தெரிவித்தார் என்பதும் அவரும் பின்னர் கண்டனங்களுக்கு உள்ளானார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Tuesday, 2 March 2010

கெளதம் மேனனின் "துப்பறியும் ஆனந்த்" படத்தில் அஜித்?

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில், அஜித்தின் அடுத்தப்படத்தை கெளதம் மேனன் இயக்குவதாகவும், அப்படத்திற்கு "துப்பறியும் ஆனந்த்" என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இயக்குனர் மேனன் ஒரு துப்பறியும் கதையை அஜித்திற்காக தயாரிப்பதாகவும், அந்தப்படத்தில் அஜித்திற்கு ஆனந்த் என பெயர் கொண்ட மிகவும் புத்திசாதுர்யமான துப்பறிவாளன் வேடம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சிலவேளை இந்தப்படத்திற்கு "உளவாளி" எனப் பெயரிடப்படலாம். இந்தப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறாராம்.

இதேவேளை, கெளதம் மேனனும் ஹரிஸ் ஜெயராஜும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனடிப்படையில் கெளதம் மேனனின் புதிய படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, 28 February 2010

23 கோடி கேட்ட அஜித் ....!


முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில் பரபரப்பாக பேசிய அஜித், பின்னர் முதல்வரை தனிமையில் சந்தித்துப் பேசினார். அஜீத்-முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன என பலரது மனதையும் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது இப்போது. அஜீத் பேசியது திரையுலக விஷயங்கள் மட்டுமல்ல, தனது கனவுகளில் ஒன்றான கார் ரேஸ் பற்றியும்தானாம். கிட்டதட்ட நாற்பது நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பில் அஜீத் பெரிதாக ஒரு விஷயத்தை சாதித்துவிட்டு வந்திருக்கிறார். அது என்ன?



ங்கிலாந்தில் நடந்த பார்முலா 3 கார் ரேசில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தை அடைந்தவர் அஜீத். பார்முலா 2 ரேசுக்கு முன்னேற வேண்டும் என்பதுதான் அவரது லட்சியங்களில் ஒன்று.


"இந்தியாவில் கார் பந்தயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை வெறும் விளையாட்டாக பார்க்காமல் வியாபாரமாகவும் கருத வேண்டும். பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே அதிக ஊக்கம் தருவதை விட்டுவிட்டு கார் பந்தயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்".

"இந்த பந்தயம் என்னவோ பெரும் பணக்காரர்களின் விளையாட்டு என்று கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கவே நானும் கூட இதில் ஈடுபடுகிறேன். இந்த விளையாட்டை நம் நாட்டில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் தருவதை போல இந்த விளையாட்டுக்கும் ஊக்கம் தர வேண்டும்" என்று முன்பு ரேஸ்களில் கலந்து கொள்ளும் போது கூறி வந்தார் அஜித்.

முதல்வரை சந்தித்தபோதும் இது குறித்துதான் பேசினாராம் அஜித், "ஃபார்முலா 2 கார் ரேசுக்கு அரசே நிதி ஒதுக்கி ஸ்பான்சர் செய்யணும். இதுக்கு 23 கோடி ரூபாய் ஆகும். அதை நீங்க எங்களுக்கு செஞ்சு தரணும்" என்று வேண்டுகோள் வைத்தாராம். தகுதியான நான்கு வீரர்களின் பயோ டேட்டாக்களையும் கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள். இதுபற்றியெல்லாம் ஆர்வமாகவும் விளக்கமாகவும் கேட்டுக் கொண்ட முதல்வர், உடனடியாக பாஸிட்டிவான பதிலும் கொடுத்தாராம். பொறுத்திருந்து பார்க்கலாம், அரசு நிதியுதவி செய்கிறதா என்று....
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog