விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ரஜினி, அப்படத்தின், நடிகர், நடிகைகள், ஏனைய படக்குழுவினர் எல்லோரையும் மனசார வாழ்த்தியுள்ளார். "எங்கே அந்த கேமராமேன்? கூப்பிடுங்க அவரை." என்று கணேஷை தேடிய ரஜினி அவரை பாராட்டினார். கணேஷ்தான், காக்கக் காக்க படத்தின் படப்பிடிப்பாளர் என நினைத்தாராம். கணேஷ், 'காக்கக் காக்க கேமராமேன்' பாத்திரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தார். காக்கக் காக்க படத்தின் உண்மையான படப்பிடிப்பாளர், R.D.ராஜசேகர். பின்னர் இந்த விடயம் ரஜினிக்கு சொல்லப்பட, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்..' என்று, ஆச்சரியமாக கூறினாராம்.
இயக்குனர் கெளதம் மேனன் இதுபற்றி கூறியது, "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்". கெளதம் மேனன் மேலும் கூறுகையில், "இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமாக விமர்சகர்கள் குடிப்பிட்டு கூறிய குறைகளை எனது அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்". என கூறினார்
Showing posts with label Gowtham Menan. Show all posts
Showing posts with label Gowtham Menan. Show all posts
Friday, 5 March 2010
ரஜினி தேடிய கேமராமேன்...!
Tuesday, 2 March 2010
கெளதம் மேனனின் "துப்பறியும் ஆனந்த்" படத்தில் அஜித்?
| உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில், அஜித்தின் அடுத்தப்படத்தை கெளதம் மேனன் இயக்குவதாகவும், அப்படத்திற்கு "துப்பறியும் ஆனந்த்" என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இயக்குனர் மேனன் ஒரு துப்பறியும் கதையை அஜித்திற்காக தயாரிப்பதாகவும், அந்தப்படத்தில் அஜித்திற்கு ஆனந்த் என பெயர் கொண்ட மிகவும் புத்திசாதுர்யமான துப்பறிவாளன் வேடம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. சிலவேளை இந்தப்படத்திற்கு "உளவாளி" எனப் பெயரிடப்படலாம். இந்தப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறாராம். இதேவேளை, கெளதம் மேனனும் ஹரிஸ் ஜெயராஜும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனடிப்படையில் கெளதம் மேனனின் புதிய படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. |
Labels:
Ajith,
Cinema News,
Gowtham Menan,
அஜித்,
கெளதம் மேனன்,
சினிமா செய்திகள்,
துப்பறியும் ஆனந்த்
Subscribe to:
Posts (Atom)

