ஒரு பத்திரிக்கை, பாவனா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்ட போது, தனது கைத்தொலைபேசி, தொடர்ந்து சினுங்கிக்கொண்டிருந்ததாக பாவனா கூறினார். தனது திருமணம் பற்றி பாவனா மேலும் கூறியதாவது, "என்னவிடயம் என்றே தெரியாமல் சிலர் என்னை வாழ்த்தினார்கள். தொலைபேசியில் கதைத்த சிலர், எனக்கு இன்னும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றால் தாங்கள் என்னை கல்யாணம் பண்ண ஆயத்தமாகவிருப்பதாக கூறினர்.
இவ்வாறன கேள்விகளுக்கு பதிலளிப்பதிலும் பார்க்க, கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் போலத் தோன்றுகிறது எனக்கு. இந்த வதந்திகளுக்கெல்லாம் காரணம், கோபிகா, நவ்யா நாயர் ஆகியோர் கல்யாணம் செய்துவிட்டனர். எனவே மக்கள் நினைக்கிறார்கள் அடுத்ததாக நான் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று. எனது பெற்றோர் இன்னும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கக்கூட இல்லை. இரண்டு வருடங்களுக்கு பின்தான் திருமணம் செய்துகொள்வேன். அதுவும் முன் பின் அறிமுகமில்லாத ஒருவரை திருமணம் செய்யமாட்டேன். எனது திருமணத்தைப்பற்றி நான் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, மிகப் பெரிதாகத்தான் எனது திருமணம் நடைபெறும்.
நிச்சயமாக அறிவித்தலேதும் இல்லாமல் அவசரமாக கல்யாணம் பண்ண மாட்டேன். இந்த விடயம் பற்றி நான் மிகையும் தெளிவாக இருக்கிறேன். என்னைக் கல்யாணம் செய்கிறவர், எனக்கு தெரிந்தவராக, எனது நெருங்கிய நண்பராக, எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்.
அசல் படத்திற்கு பிறகு புனித் ராஜ்குமாருடன் கன்னட மொழிப் படமொன்றில் நடிக்கிறேன். அசல் வெளிவந்த பின்னர், எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் நிறைய தமிழ் படங்கள் என்னைத் தேடி வருகின்றன. எனினும், எந்தவொரு தமிழ் படத்திலும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை" என பாவனா மேலும் கூறினார்.
Showing posts with label Bavana. Show all posts
Showing posts with label Bavana. Show all posts
Friday, 5 March 2010
Thursday, 4 March 2010
பாவனாவின் ஜக்கி.
பாவனாவின் ஜக்கி திரைப்படம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு கன்னட மொழிப் படம். ஜக்கிதான் பாவனாவின் முதலாவது கன்னட மொழிப் படம். இந்த படத்தில் பாவனாவிற்கு, அப்பாவிப் பெண் வேடம் வழங்கப்பட்டுள்ளது. வெயில் படத்தில் வரும் பாவனாவின் பாத்திரத்தைப்போலவே ஜாகியிலும் பாவனாவின் பாத்திரம் அமைந்துள்ளது. பூர்ணிமா என்டபிரைசஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றது.
கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர் புனீத் ராஜகுமாருக்கு ஜோடியாக பாவனா இந்தப்படத்தில் நடிக்கிறார். "நான் லக்ஷ்மி எனும் அப்பாவிப்பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகளில் பாவாடை தாவணியிலும் சுடிதாரிலும் தான் தோன்றுவேன்" என இந்தப் படம் தொடர்பாக பாவனா கூறினார். முதலாவது படத்திலேயே ராஜகுமாருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாவனாவிற்கு கன்னட சினிமா துறையிலும் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமுண்டு. அண்மையில் வெளிவந்த அசல் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாவனா பிரமாதமாக நடித்திருந்தார். இது, கன்னட ரசிகர்களிடையே ஜக்கி படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Labels:
Bavana,
Cinema News,
Jackie,
Kannada Cinema,
Punnit Rajkumar,
சினிமா செய்திகள்,
பாவனா,
ஜக்கி
Subscribe to:
Posts (Atom)