Showing posts with label Jackie. Show all posts
Showing posts with label Jackie. Show all posts

Thursday, 4 March 2010

பாவனாவின் ஜக்கி.

பாவனாவின் ஜக்கி திரைப்படம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு கன்னட மொழிப் படம். ஜக்கிதான் பாவனாவின் முதலாவது கன்னட மொழிப் படம். இந்த படத்தில் பாவனாவிற்கு, அப்பாவிப் பெண் வேடம் வழங்கப்பட்டுள்ளது. வெயில் படத்தில் வரும் பாவனாவின் பாத்திரத்தைப்போலவே ஜாகியிலும் பாவனாவின் பாத்திரம் அமைந்துள்ளது. பூர்ணிமா என்டபிரைசஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றது.

கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர் புனீத் ராஜகுமாருக்கு ஜோடியாக பாவனா இந்தப்படத்தில் நடிக்கிறார். "நான் லக்ஷ்மி எனும் அப்பாவிப்பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகளில் பாவாடை தாவணியிலும் சுடிதாரிலும் தான் தோன்றுவேன்" என இந்தப் படம் தொடர்பாக பாவனா கூறினார். முதலாவது படத்திலேயே ராஜகுமாருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாவனாவிற்கு கன்னட சினிமா துறையிலும் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமுண்டு. அண்மையில் வெளிவந்த அசல் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாவனா பிரமாதமாக நடித்திருந்தார். இது, கன்னட ரசிகர்களிடையே ஜக்கி படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog