Showing posts with label Selvaragavan. Show all posts
Showing posts with label Selvaragavan. Show all posts

Friday, 12 March 2010

செல்வா - சோனியா : சட்டபூர்வமாக பிரிந்தனர்


சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றம் ஒன்று செல்வராகவன் - சோனியா அகர்வால் பிரிவிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. சுயவிருப்பின் பேரில் விவாகரத்து பெறும் வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ராமலிங்கம், அவர்கள் இருவரையும் சட்டபூர்வமாக பிரித்துவைத்தார். முன்னதாக மார்ச் 9 ம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த இருவரும் தமது முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பதாகவும், விவாகரத்தை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி, 12 ம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
காதல் கொண்டேன் படப்பிடிப்பில் காதல் கொண்ட சோனியா - செல்வா 2006 ம் ஆண்டு திருமணம் செய்தனர். எனினும், இரண்டு வருடங்களே நீடித்த அவர்களின் தாம்பத்யம், 2009 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடுக்கப்பட்ட விவாகரத்து வழக்கின் மூலம் கேள்விக்குறியானது. அன்றிலிருந்து பிரிந்து வாழ்ந்த இருவரும், நேற்றிலிருந்து நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.

Monday, 1 March 2010

இனி, செல்வராகவனின் படங்களின் யுவனுக்கு இடமில்லை

இயக்குனர் செல்வராகவனின் காற்று இப்போது இசையமைப்பாளர் G.V.பிரகாஷின் பக்கம் அடிப்பதுபோல் தெரிகிறது. செல்வராகவனின் அடுத்த படத்திற்கு இசையமைக்க பிரகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப்படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.

இதுநாள் வரைக்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் செல்வராகவனின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர்கள் இருவரினதும் கூட்டில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் பிரபலமடைந்திருந்தன. ஆனால் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கு யுவனை ஒப்பந்தம் செய்யவில்லை. மீண்டும் யுவனுடன் இணைந்து பணியற்றுவீர்களா என செல்வராகவனிடம் கேட்ட பொது, இனிமேலும் அதற்கு சாத்தியமில்லை என பதிலளித்திருக்கிறார்.

அஜித் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை இயக்குவதற்காக சரியான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருப்பதாக இயக்குனர் செல்வராகவன் மேலும் கூறினார். 

Saturday, 27 February 2010

மலையாள படத்தில் சோனியா அகர்வால்

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றுள் 7G ரெயின்போ காலனி மற்றும் திருட்டுபயலே முக்கியமான படங்கள். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்தபின்னர் அவர் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் செல்வராகவன் நடிகை அண்ட்ரியா உடன் நெருங்கி பழகுவதாக வந்த செய்தியுடன் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் உருவாக்கி அது விவாகரத்து வழக்கிற்காக நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு சென்றது. பின்னர் இருவரையும் பிரிந்து வாழும் நிலைமையையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சோனியா அகர்வால் புதிய படங்களில் வாய்ப்பு தேடினார். கவர்ச்சி உடையில் பொது நிகழ்ச்சிகளுக்கு வந்த அவர் தனது புகைப்படங்களையும் அல்பம்களையும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பினார்.

இப்போது மலையாளப் படம் ஒன்றில் நடிக்க தெரிவாகியிருக்கிறார். அந்தப்படத்தில் ஹீரோவாக சுரேஷ் கோபி நடிக்கவிருக்கும் அதேவேளை அந்தப்படத்தை T.S.சுரேஷ் பாபு இயக்குகிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog