Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

Sunday, 7 March 2010

நித்தியானந்தவிற்கு ஆண்மைக்குறைவா?


நித்தியானந்தாவின் காம லீலைகள் வீடியோவாக சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்ததும் சில ஊடகங்கள் அச்செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி தமது வருமானத்தைப் பெருக்கிக்கொண்டதும் கடந்த வாரத்தில் நடந்த சூடான சங்கதி என்பது யாவரும் அறிந்ததே. நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும், சாமியாரின் ஆச்சிரம ஓய்வெடுக்கும் அறையில் உல்லாசமாக இருந்தபோதே அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. அதுவும், இரண்டு காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டிருந்தன. ஒரு நாள் சாறியுடனும் அடுத்த நாள் சல்வாருடனும் நடிகை ரஞ்சிதா காட்சியளித்திருந்தார். 

இந்த வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருந்தால், அதில் நடிகை ரஞ்சிதா, எதோ ஒரு மாத்திரையை சாமியாருக்கு கொடுப்பதை அவதானித்திருப்பீர்கள். செய்திச் சேவை ஒன்றில் இந்தக் காட்சி ஒளிபரப்பப்பட்ட போது, செய்தி வாசிப்பாளர், எதோ ஒரு மாத்திரை நித்தியானந்தாவிற்கு கொடுக்கப்படுவதாகவே அந்தக் காட்சியை வர்ணிக்கின்றார். அப்படியானால், அது என்ன மாத்திரை? எதற்காக நித்தியானந்தா அதை உட்கொள்கிறார்?
மனதில் தோன்றும் சில கேள்விகள், 
1. நிதியானந்தாவிற்கு ஏதேனும் வியாதி இருக்கிறதா?
2. அப்படியே வியாதி இருந்தாலும், ஏன் ரஞ்சிதா வந்து மாத்திரையை கொடுக்கும் வரை காத்திருந்தார்?
3. அது ஆண்மையைத் தூண்டுவதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையா?

பொதுவாக, நோய்களுக்கு மாத்திரை எடுக்கும் போது, தனியொரு மாத்திரையை எடுத்துக்கொள்வது அரிது. ஒன்றிற்கு மேற்பட்ட மாத்திரைகளை எடுப்பதே வழமை. அடுத்தது, நோய்க்கான மாத்திரையாகவிருந்தால், ரஞ்சிதா வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நித்தியானந்தா, தானாகவே எடுத்து உட்கொண்டிருக்கலாம் அல்லது வேறு யாராவது எடுத்துக்கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த வீடியோ காட்சியை வைத்துப்பார்க்கும் போது, விளக்கு அணைக்கப்படுவதற்கு (ஏன் அணைத்தார்கள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை) சில நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த மாத்திரை எடுக்கப்படுகிறது. அதுவும், ரஞ்சிதா வந்த பின்னர்தான் மாத்திரை எடுக்கப்படுகிறது. 

இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, அந்த மாத்திரை, ஆண்மையை தூண்டுவதற்காக எடுக்கப்படும் மாத்திரையா எனும் எண்ணம் வலுப்பெறுகிறது. அப்படியானால் நித்தியானந்தா ஆண்மைக்குறைபாடுடையவரா? நடிகை ரஞ்சிதாவிற்கு வேறு எவருமே கிடைக்கவில்லையா?

தினகரனில் வெளியாகியுள்ள வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்

சூடான பக்கத்தை உங்கள் சூடான கருத்துக்களால் மேலும் சூடாக்குங்கள் வாசகர்களே..!

Wednesday, 3 March 2010

நித்யானந்தா தலைமறைவு!

நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலையில் இருந்தவேளை வீடியோ படம் பிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாமி (?) நித்தியானந்தா தலைமரைவாகீவிட்டார். அவரது ஆச்சிரமங்கள் பல பக்த கேடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகளையும் படங்களையும் வீடியோ காட்சிகளையும் எமது வாசகர்களுக்காக இங்கே தந்திருந்தோம். இதன் தொடர்ச்சியாக, தினகரனில் வெளிவந்த புதிய செய்தியையும் உங்களுக்காக இங்கே தருகிறோம்.

தினகரனில் வெளியாகியுள்ள செய்தி:


நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலைகள் : நித்யானந்தா தலைமறைவு!

சென்னை: பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8&ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.


தினகரனில் வெளியாகியுள்ள வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்


Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog