Showing posts with label நமீதா. Show all posts
Showing posts with label நமீதா. Show all posts

Saturday, 13 March 2010

நமீதாவின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவிக்கிறோம்..!

தனது செல்ல நாய் கூஃபி இறந்த சோகம் தாளாமல் ஒரு நாள் முழுக்க அழுது புலம்பிய நமீதா, அதற்கு மேல் சென்னையில் இருக்கப் பிடிக்காததால் நேற்று மாலை மும்பையிலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றார். நமீதா சூரத்திலிருந்த போது வளர்த்த நாய் இந்த நாயின் பெயர் கூஃபி. சென்னையில் அவர் குடியேறியதும் தன் செல்ல நாயையும் கூடவே அழைத்து வந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன் இந்த நாய்க்கு வாத நோய் தாக்கியது. அந்த நாய்க்கு உயர்தர சிகிச்சை அளித்து வந்தார் நமீதா. ஆனாலும் நேற்று கூஃபி இறந்துவிட்டது. இதனால் பெரும் சோகத்துக்கு ஆளான நமீதா, நேற்று முழுவதும் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாராம். பின்னர் படப்பிடிப்பையல்லாம் கேன்சல் செய்துவிட்டு, மும்பையிலுள்ள தனது பெற்றோரைப் பார்க்க கிளம்பிச் சென்றார். “கூஃபி இறந்ததை என்னால் தாங்க முடியவில்லை. எனவே கொஞ்ச நாளைக்கு மன ஆறுதலுக்காக அம்மா அப்பாவிடம் இருக்கப் போகிறேன்” என்றார் நமீதா!

Wednesday, 3 March 2010

கிறங்கவைக்க வருகிறாள், நமிதாவின் "அழகான பொண்ணு"

நமீதா நடிக்கும் "அழகான பொண்ணு" திரைப்படம் 5 ம் திகதி மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. அதாவது நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்தப்படத்தில் வழமைக்கு மேலாகவே நமீதா கவர்ச்சி காட்டியிருக்கிறார். இயக்குனர் திருவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப்படத்தின் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடியே, அதிலும் குறிப்பாக நமீதாவின் ரசிகர்களிடியே ஒரு பலத்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருந்தன.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - திரு.
பிரதான நடிகன் - ராஜ் கார்த்திக்
நடிகை - நமீதா
துணை நடிகர்கள் - மயில்சாமி, வாசு விக்ரம் மற்றும் பலர்.

நமிதாவை பிரதான பாத்திரமாக கொண்ட இந்த திரைப்படத்தின் கதை, ஒரு 18 வயது இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியது. 18 வயது இளைஞன் 25 வயது அழகான பெண்ணை சந்திக்கிறான். அவனுக்குள் எழும் மாற்றங்கள், தூண்டல்கள் என்பவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இயக்குனரின் கவலை என்ன தெரியுமா? அழகான பொண்ணு படத்தின் விளம்பரங்களைப் பார்ப்பவர்கள் இது ஒரு காமப் படமோ என எண்ணுகிறார்களாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அந்தப் படத்தில் வரும் பாத்திரமாகவே நமீதா வாழ்ந்திருக்கிறார். வழமை போலவே நமீதா தேவையான இடங்களில் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என்கிறார் இயக்குனர்.

அழகான பொண்ணு, வெற்றிபெறுமா இல்லையா என்பது வேறு விடயம். அனால், நமீதா ரசிகர்களை, கிரங்கடிக்கப்போகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நமீதா, சகீலாவை மிஞ்சிவிடுவார் போலத் தெரிகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog