| நமீதா நடிக்கும் "அழகான பொண்ணு" திரைப்படம் 5 ம் திகதி மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. அதாவது நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்தப்படத்தில் வழமைக்கு மேலாகவே நமீதா கவர்ச்சி காட்டியிருக்கிறார். இயக்குனர் திருவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப்படத்தின் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடியே, அதிலும் குறிப்பாக நமீதாவின் ரசிகர்களிடியே ஒரு பலத்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருந்தன. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - திரு. பிரதான நடிகன் - ராஜ் கார்த்திக் நடிகை - நமீதா துணை நடிகர்கள் - மயில்சாமி, வாசு விக்ரம் மற்றும் பலர். நமிதாவை பிரதான பாத்திரமாக கொண்ட இந்த திரைப்படத்தின் கதை, ஒரு 18 வயது இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியது. 18 வயது இளைஞன் 25 வயது அழகான பெண்ணை சந்திக்கிறான். அவனுக்குள் எழும் மாற்றங்கள், தூண்டல்கள் என்பவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இயக்குனரின் கவலை என்ன தெரியுமா? அழகான பொண்ணு படத்தின் விளம்பரங்களைப் பார்ப்பவர்கள் இது ஒரு காமப் படமோ என எண்ணுகிறார்களாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அந்தப் படத்தில் வரும் பாத்திரமாகவே நமீதா வாழ்ந்திருக்கிறார். வழமை போலவே நமீதா தேவையான இடங்களில் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என்கிறார் இயக்குனர். அழகான பொண்ணு, வெற்றிபெறுமா இல்லையா என்பது வேறு விடயம். அனால், நமீதா ரசிகர்களை, கிரங்கடிக்கப்போகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நமீதா, சகீலாவை மிஞ்சிவிடுவார் போலத் தெரிகிறது. |
Showing posts with label Azhakaana Ponnu. Show all posts
Showing posts with label Azhakaana Ponnu. Show all posts
Wednesday, 3 March 2010
கிறங்கவைக்க வருகிறாள், நமிதாவின் "அழகான பொண்ணு"
Subscribe to:
Posts (Atom)





