Showing posts with label Meena. Show all posts
Showing posts with label Meena. Show all posts

Wednesday, 10 March 2010

மீனா படங்களில் தொடர்ந்து நடிப்பார்.

குழந்தைப் பருவத்திலேயே அறிமுகமாகி நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை மீனா. இவரின் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அண்மையில் திருமணம் முடித்த மீனா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. தனது தாம்பத்திய வாழ்க்கையை குழப்பாதபடி படங்களில் நடிக்க மீனா திட்டமிட்டுள்ளார்.

மீனாவின் நெருங்கிய வட்டாரங்களின் கூற்றுப்படி, ஒரு வருடத்தில், ஒரு தமிழ்ப் படம், ஒரு மலையாளப் படம் மற்றும் ஒரு கன்னடப் படம் மட்டுமே நடிக்கும் எண்ணத்தில் மீனா இருக்கிறார். இந்த மொழிகளில் இருந்து மீனாவிற்கு வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன என்றும், தெலுங்கில் நல்ல வாய்ப்பு வந்தால் அதிலும் அவர் நடிக்கலாம் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறினர்.

வருடத்தில் மூன்று அல்லது நான்கு படங்களில் நடிப்பது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காது என்றும், இந்த முடிவை மீனா தனது கணவருடனும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே எடுத்தார் எனவும் அவர்கள் கூறினர்.

மீனாவின் நடிப்பு ஆசையில் அவரது கணவர் குறுக்கிடவில்லை என்றும் மீனா தானாகவேதான் தனது திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்ததாகவும் கூறிய அவர்கள், மீனா தற்போது தம்பிக்கோட்டை எனும் தமிழ் படத்தில் நடிப்பதாகவும் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகவிருப்பதாகவும் மேலும் கூறினர்.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog