| சிவா மனசுல சக்தி படத்தில் கவர்ச்சியாக நடித்த அனுஜாவை ஞாபகமிருக்கா? மதுரை சம்பவம் படத்தில் ஹரிகுமருடன் இணைந்து போலீஸ் வேடத்திலும் நடித்திருந்தார். பின்னர் சில காலம் அனுஜாவை காணமுடியவில்லை. இப்போது, சுந்தர் சி உடன் நகரம் மறுபக்கம் படத்தில் ஜோடி சேர்கிறார். நடுத்தரவர்க்கத்து வேலைசெய்யும் பெண்ணாக இந்தப் படத்தில் நடிக்கிறார். தலைநகரம் படத்தின் தொடர்ச்சியாகத்தான் நகரம் மறுபக்கம் படம் எடுக்கப்படுகிறது. தலைநகரம் படத்தில் ஜோதிர்மாயி நடித்திருந்தார். ஜோதிர்மாயியின் வேடத்திலா நீங்கள் நடிக்கிறீர்கள் என கேட்டதற்கு, இல்லை என மறுத்திருக்கிறார். "நான் அவ்வாறான ஒரு வேடத்தில் நடிக்க மாட்டேன். இந்தப் படம் தலைநகரத்தின் இரண்டாம் பாகம் என்றாலும் பல வித்தியாசங்களைக் கொண்டது. அதுபோலத்தான் எனது பத்திரமும்" என மேலும் கூறினார். |
Showing posts with label அனுஜா. Show all posts
Showing posts with label அனுஜா. Show all posts
Tuesday, 2 March 2010
சுந்தர் சி உடன் இணையும் அனுஜா.
Labels:
Anuja,
Cinema News,
Nakaram Marupakkam,
Sundar C,
அனுஜா,
சினிமா செய்திகள்,
சுந்தர் சி,
நகரம் மறுபக்கம்
Subscribe to:
Posts (Atom)
