IndiaGlitz இலிருந்து இந்தப்படம் எடுக்கப்பட்டது.
உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் சுருதி ஹாசன் கன்னட பாடல் ஒன்றை பாடியுள்ளார். சுருதி ஒரு பாடகியாக மட்டுமல்ல, நடிகையாகவும் இசையமைப்பாளராகவும் அறியப்பட்டவர். "Prithvi" படத்திற்காக சுருதி ஒருபாடலை படுகிறார். இந்தப் பாடத்தை சூரப்பா பாபு மற்றும் NS ராஜ்குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். இயக்குனர் ஜக்கோப் வெர்கீஸ். இசையமைப்பாளர் மணிகாந்த் காத்ரி. புனீத் ராஜ்குமார் நடிக்கும் இந்தப்படத்தில் பார்வதி மேனனும் நடிக்கிறார்.
கடந்த ஞாயிறு மாலை மும்பையிலுள்ள பிரதர்ஸ் ஸ்டுடியோவில் இந்தப் பாடல் பதியப்பட்டது. "நினைப்பிது நினைப்பிது" எனும் பாடலே சுருதியால் பாடப்பட்டுள்ளது. படத்தில் பார்வதி மேனன் இந்த பாடல் காட்சியில் தோன்றுகிறார். பாடலை பாட வந்த சுருதி ஹாசனை படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
ப்ரித்வி படத்தின் தயாரிப்பாளர்கள், சுருதி ஹாசனுடன் கன்னட படங்களில் ஹீரோயின் ஆக நடிப்பது பற்றியும் கலந்துரையாடினார். நல்ல கதையாக இருந்தால் அதுபற்றி யோசிப்பதாக ஸ்ருதி கூறியிருக்கிறார்.
Showing posts with label சுருதி ஹாசன். Show all posts
Showing posts with label சுருதி ஹாசன். Show all posts
Wednesday, 10 March 2010
Subscribe to:
Posts (Atom)
