Showing posts with label இமயமும் சிகரமும் இரட்டைசுழி. Show all posts
Showing posts with label இமயமும் சிகரமும் இரட்டைசுழி. Show all posts

Friday, 12 March 2010

ஐஸ்வர்யா வெளியிடவிருக்கும் 'இரட்டைசுழி' பாடல்கள்


இமயமும் சிகரமும் இரட்டைசுழி படத்தின் பாடல் வெளியீட்டு விழா மார்ச் மாதம் 15 ம் திகதி சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. இப்படத்தின் பாடலை வெளியிட்டுவைக்கிறார் ஐஸ்வர்யா ராய். இதற்காக அவர் சென்னை வரவிருக்கிறார். உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் உட்பட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாவை விழாக்களுக்கு அழைப்பது கடினமான விடயமெனினும், படத்தின் இயக்குனர் தாமிர ஒருவாறு ஐஸ்வர்யா ராயை தனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வைத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலசந்தர் ஆகியோரும் சில காட்சிகளில் தோன்றுகின்றனர். சங்கரின் S Pictures நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இமயமும் சிகரமும் இரட்டைசுழி படம் திரைக்கு வருகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog